நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் பத்திரமாக நிலவில் இறங்கியது.
2003, ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழாவில் அப்போதைய இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தனது உரையில், இந்தியாவின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்கலங்களை அனுப்பி, நிலவின் மேற்பரப்பில் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சந்திரயான் எனும் பெயரில் ஒரு திட்டம் குறித்து அறிவித்தார்.
இத்திட்டத்தை தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தொடர்ந்து ஊக்குவித்ததை தொடர்ந்து இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள கடந்த ஜூலை 14, 2023 அன்று ஆந்திர பிரதேச மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து சந்திரயான்-3 எனும் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
சந்திரயான் 3 விண்கலத்தில் விக்ரம் எனும் லேண்டர், பிரக்யான் எனும் ரோவர் உள்ளது. இன்று மாலை 06:04 மணிக்கு நிலவின் தென் துருவ மேற்பரப்பில் விக்ரம் லேண்டரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். இதனை தரையிறக்குவதற்கான ஆயத்த பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று மாலை 05:44 மணிக்கு தொடங்கினர்.கடைசி 15 நிமிடங்கள் லேண்டரின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு, லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும் மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3 விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்தது இஸ்ரோ.
நிலவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய நிகழ்வை தென்ஆப்ரிக்காவில் இருந்து பிரதமர் மோடி பார்வையிட்டார்.
பின்னர் அவர் பேசுகையில், ‛‛நிலவை வென்றுவிட்டோம். வரலாறு படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள், இந்தியா நிலவில் காலடி பதித்துள்ளது. ஒட்டுமொத்த மக்களையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. நாட்டு நாட்டு மக்களுக்கு எனது நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.'' என்றார்.
முன்னதாக நாளும் முழுவதும் நிலவில் கால் பதித்த விக்ரம் லெண்டரை இணையும் வாயிலாக நேரலையில் பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்தனர், மத வேறுபாடுகளை அனைத்து மதத்தினரும் சந்திராயன் மூன்று பத்திரமாக தரையிறங்க பிரார்த்தனை செய்ததும் குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“