scorecardresearch

செயற்கைக் கோளில் டி.எஸ்.பி பாடல்: எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ

எஸ்.எஸ்.எல்.வி டி2 திட்டம் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் உள்பட 3 செயற்கைக் கோளை இஸ்ரோ நாளை விண்ணில் செலுத்துகிறது.

செயற்கைக் கோளில் டி.எஸ்.பி பாடல்: எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ

சிறிய வகை செயற்கைகோள்ளை சுமந்து செல்லும் இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி டி2 (SSLV-D2) ராக்கெட் மூலம் நாளை (பிப்ரவரி 10) புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் உள்பட 3 செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நாளை வெள்ளிக்கிழமை காலை 9:18 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது.

எஸ்.எஸ்.எல்.வி டி2 மூன்று செயற்கைக் கோள்கள் ‘இஒஎஸ்-07′, அமெரிக்காவின் ஜானஸ்-1, இந்தியாவின் ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பு தயாரித்த `ஆசாதிசாட்-2’ ஆகிய 3 செயற்கைக் கோள்களை புவி வட்ட பாதைக்கு சுமந்து செல்கிறது. இதில், இஒஎஸ்-07 ( EOS-07) முதன்மை செயற்கைக் கோளாக உள்ளது. இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக் கோள் 156.3 கிலோ எடையுள்ளது. அதேபோல் ஜானஸ்-1, ஸ்மார்ட் செயற்கைக்கோள் பணியை உள்ளடக்கியது ஆகும்.

டி.எஸ்.பியின் பாடல்

ஆசாதிசாட்-2 செயற்கைக் கோள் 75 பள்ளிகளைச் சேர்ந்த 750 பள்ளி மாணவிகளால் வடிவமைக்கப்பட்டது. ஆசாதிசாட் செயற்கைக் கோள் வெப்பநிலையை ஆராய அனுப்பபடுகிறது. மேலும் இந்த செயற்கைக் கோள் ராக்ஸ்டார் டி.எஸ்.பி இசையமைத்து பாடிய என்.சி.சி பாடலை இசைத்த படி அனுப்பபடும் என செயற்கைகோளை உருவாக்கிய ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது. தேசிய கேடட் கார்ப்ஸ் (National Cadet Corps) தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் வகையில் செயற்கைக்கோளில் என்சிசி பாடல் இசைக்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: Isro is sending these satellites to space on sslv one of them will play the ncc song

Best of Express