சந்திரயான் -3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், ஏவுகலத்திலிருந்து விண்கலம் பிரிந்த பிரத்யேக காட்சிகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
நிலவு குறித்த ஆராய்ச்சி தொடர்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தொடங்கிய மிஷன் சந்திரயான். இதில் நிலவு சுற்றுவட்டப்பாதை நிலைநிறுத்தும் முயற்சியான சந்திரயான் 1 வெற்றி பெற்ற பிறகு, நிலவில் தரையிறக்கும் சந்திரயான் 2 திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் சந்திரயான் 2 நிலவில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.
இதையும் படியுங்கள்: சந்திரயான் திட்டமும் தமிழர்களும்.. வெற்றிக்கு பின்னால் உள்ள ஸ்டோரி!
இதனைத்தொடர்ந்து தற்போது சந்திரயான் 3 திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜூலை 14, வியாழன் அன்று பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த லேண்டர் நிலவுக்கு தனது பயணத்தை முடிக்க கிட்டத்தட்ட 42 நாட்கள் ஆகும். 42 நாட்களுக்குப் பிறகு நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கும்.
இஸ்ரோ இந்த பணியை வெற்றிகரமாக நிறுத்தினால், சந்திரனில் மென்மையான தரையிறக்கத்தை செய்த மற்ற மூன்று நாடுகளின் பிரத்யேக பட்டியலில் இந்தியா சேரும். முன்னதாக அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் மிக சமீபத்தில் சீனா ஆகியவை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளன. அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் இரண்டும் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்குவதற்கு முன்பு பல விண்கலங்களை விபத்துக்குள்ளாக்கின. 2013 இல் Chang'e-3 பணியின் முதல் முயற்சியில் வெற்றி பெற்ற ஒரே நாடு சீனா.
விண்கலம் பூமியில் இருந்து வெற்றிகரமாக புறப்பட்டு, நிலவை நோக்கிய பயணத்தில் கிரகத்தை சுற்றி வருகிறது. அடுத்ததாக பூமியில் சுற்றும் நிகழ்வுகள், சந்திர சுற்றுப்பாதையில் செருகுதல், லேண்டரைப் பிரித்தல், டீபூஸ்ட் இயக்கங்களின் தொகுப்பு மற்றும் ஒரு சக்தி இறங்கும் கட்டம் உட்பட பல முக்கியமான நிகழ்வுகள் வரிசையாக உள்ளன, சந்திரயான் திட்ட இயக்குனர் பி வீரமுத்துவேல் கூறியுள்ளார்.
எல்.வி.எம் 3 ராக்கெட் ஏவப்பட்ட 16 நிமிடத்தில் புவியின் சுற்றுப்பாதையை அடைந்தது. அதனைத் தொடர்ந்து ராக்கெட்டில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் பிரிந்து சென்றது. இந்தநிலையில், ராக்கெட்டில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் பிரிந்து செல்லும் காட்சிகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil