நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (இஸ்ரோ) அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் பத்திரமாக நிலவில் இறங்கியது.
2003 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழாவில் அப்போதைய இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தனது உரையில், இந்தியாவின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்கலங்களை அனுப்பி, நிலவின் மேற்பரப்பில் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சந்திரயான் எனும் பெயரில் ஒரு திட்டம் குறித்து அறிவித்தார்.
இந்தத் திட்டத்தை தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஊக்குவித்ததை தொடர்ந்து இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஜூலை 14, 2023 அன்று ஆந்திரப் பிரதேச மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து சந்திரயான்-3 எனும் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
இந்த நிலையில் சந்திரயான் 3 திட்டமிட்டப்படி ஆக.24ஆம் தேதி விண்ணில் இறங்கியது. தற்போது அதன் ரோவர் தென்துருவத்தில் 8 மீட்டர் தூரம் வரை கடந்துள்ளது.
இந்தத் தகவலை இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“