சந்திரயான்-3 கிரையோஜெனிக் இன்ஜினின் 2-ம் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இந்திய விண்வௌி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திரயான்-2 விண்கலம் திட்டமிட்டவாறு நிலவில் தரையிறக்கப்பட முடியாமல் திட்டம் தோல்வியடைந்தது. இதையடுத்து,
சந்திராயன்-3 விண்கலத்தை ஏவ இஸ்ரோ திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது.
அதன்படி சந்திராயன்-3 விண்கலத்தின் முதற்கட்ட சோதனை பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கை கோள் மையத்தில் கடந்த ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை வெற்றிகரமாக இஸ்ரோ நடத்தி முடித்தது. இதன் அடுத்த கட்டமாக இரண்டாம்கட்ட சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சி.இ-20 கிரையோஜெனிக் இன்ஜினின் விமான உந்து வேக தொடர் வெப்ப சோதனை கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/