இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) இன்று (மார்ச் 26) காலை 9 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம் 3- எம்.3 ராக்கெட் மூலம் 36 ஒன்வெப் செயற்கை கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது.
இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல், டிவிட்டர், பேஸ்புக் தளங்களில் ராக்கெட் ஏவுதல் நேரலை செய்யப்பட்டது. இந்த 36 செயற்கை கோள்களும் (Low Earth Orbit) பகுதிக்கு அனுப்பபட்டுள்ளது. பிராட்பேண்ட் இணையை சேவையை மேம்படுத்தும் வகையில் ஒன்வெப் செயற்கை கோள்கள் அனுப்பபட்டுள்ளது. பார்தி குழுமம் இஸ்ரோவின் வணிக பயன்பாட்டிற்கான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் உடன் மொத்தம் 72 செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு 100 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
எல்.வி.எம் -3 இஸ்ரோவின் அதிக எடை கொண்ட ராக்கெட்டாகும். மொத்தம் 640 டன் எடை வரை சுமந்து செல்லும் எல்.வி.எம் -3 திட, திரவ எரிபொருள்கள் மூலம் இயங்குகிறது. தற்போது ஏவபட்டுள்ள 36 செயற்கை கோள்கள் 5,805 கிலோ எடை கொண்டது. ஒவ்வொரு கோளும் சுமார் 150 கிலோ எடை கொண்டது.
ஒன்வெப் செயற்கை கோள்கள் பூமியில் இருந்து சுமார் 1200 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தற்போது இரண்டாவது கட்டமாக 36 செயற்கை கோள்கள் ஏவப்பட்டுள்ளன. முன்னதாக கடந்தாண்டு அக்.23-ம் தேதி 36 செயற்கை கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட சுற்றுபாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/