New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/05/navic-isro-1200.jpg)
ISRO
ISRO's Next launch on May 29: இஸ்ரோ என்.வி.எஸ் என்ற விண்மீன் தொகுதிக்கான வழிசெலுத்தல் செயற்கைக்கோளை மே 29-ம் தேதி விண்ணில் செலுத்த உள்ளது.
ISRO
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), இந்த ஆண்டின் மூன்றாவது ஏவதலை மே 29-ம் தேதி மேற்கொள்ள உள்ளது. என்.வி.எஸ் என்ற விண்மீன் தொகுதிக்கான வழிசெலுத்தல் செயற்கைக்கோளை மே 29-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி தளத்தில் இருந்து ஏவ உள்ளது.
இஸ்ரோ 5 ஆண்டுகளுக்கு பிறகு பழைய செயற்கைகோளுக்கு பதிலாக புதிய செயற்கைகோளை ஏவ உள்ளது. இந்திய பிராந்திய செயற்கைக்கோள் அமைப்பாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் விளங்கி வருகிறது. இது 24x7 இயங்கும் தரை நிலையங்களின் வலையமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதே திட்டத்துடன் இஸ்ரோ தனது முதல் சூரிய ஆய்வு திட்டமான ஆதித்யாவின் முதல் சோதனை திட்டம் ஆதித்யா-எல் 1 பணிக்கும் தயாராகி வருகிறது. இன்னும் சில நாட்களில் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில், ககன்யான் திட்டத்தின் முதல்
ஆளில்லா விமான பயணங்களையும் முயற்சிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
NVS-01 செயற்கைக்கோள் மற்றொரு செயற்கைக்கோள் IRNSS-1G இன் வழிசெலுத்தல் திறன்களை விண்மீன் தொகுப்பில் மாற்றும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.