விண்வெளியில் இருந்தவாறு சூரியனை ஆய்வு செய்யவிருக்கும் ஆதித்ய-எல் 1 விண்கலத்துக்கான கவுண்ட்டவுன் இன்று தொடங்கப்பட்டுள்ளது. நாளை விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்ய இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வகமான ஆதித்யா- எல்1 நாளை காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான 24 மணி நேர கவுன்டவுன் தொடங்கப்பட்டுள்ளது. சந்திராயன் 3 வெற்றியைத் தொடர்ந்து, ஆதித்யா எல் – 1 குறித்த ஆர்வம் நாடு முழுவதும் எழுந்திருக்கிறது. இந்த விண்கலம் விண்வெளியில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள ’லக்ராஞ்சியன் புள்ளி எல்-1’ என்னும் இடத்தில்தான் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.
சூரியன் ஒளி மண்டலம், நிற மண்டலம், சூரியன் வெளிப்புற அடுக்குகள், ஒளி வட்டம் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்ய இதில் விஇஎல்சி, என்ற தொலை நோக்கி, எஸ்யுஐடி என்ற தொலை நோக்கி, ஏ ஸ்பெக்ஸ் என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பி.ஏ.பி.ஏ, சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் , சூரியனின் வெளிப்புற அடுக்குகளில் ஏற்படும் டைனமிக் மாற்றங்களை ஆராயும் ஹெல் 10 எஸ், கிரகங்களுக்கு இடையேயான காந்த புலதன்மையை அளவிடும் மேக்னோ மீட்டர் என்ற 7 முக்கிய கருவிகள் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“