இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிக எடை கொண்ட ராக்கெட்டான எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் வரும் 26-ம் தேதி இரண்டாவது மற்றும் கடைசி ஒன்வெப் விண்கலத் தொகுப்பு (36 செயற்கைக் கோள்கைளை) சுமந்து செல்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது தளத்தில் இருந்து காலை 9 மணிக்கு விண்வெளிக்கு ஏவப்படுகிறது. எல்.வி.எம்-3 ராக்கெட் 8 டன் வரை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்.
ஒன்வெப் இந்தியா-2-க்கான 36 செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு ஏவப்படுகிறது. இது ஒன்வெப் செயற்கைக் கோள்களில் 2-வது மற்றும் கடைசி தொகுதியாகும். முன்னதாக கடந்தாண்டு அக்டோபரில் முதல் தொகுதி அனுப்பபட்டது. தற்போது ஏவப்படும் 36 செயற்கைகோள்களின் மொத்த எடை சுமார் 5.8 டன் ஆகும். எல்.வி.எம்-3 ராக்கெட் 8 டன் எடை வரை கொண்டு செல்லும் திறன் கொண்டது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட நிறுவனம், இங்கிலாந்து அரசாங்கம் மற்றும் இந்தியாவின் பாரதி நிறுவனத்தில் ஆதரவுடன் அதிக வேக மற்றும் நிலையான வேகம் கொண்ட இன்டர்நெட் இணைப்புளை வழங்க 588-செயற்கைக்கோள் அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றும் 49 செயற்கைக்கோள்கள் கொண்ட 12 வளையங்களில் வைக்கப்படும்,
ஒவ்வொரு செயற்கைக்கோளும் 109 நிமிடங்களில் பூமியைச் சுற்றி ஒரு முழு பயணத்தை நிறைவு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.