சர்வதேச விண்வெளி நிலையம் இப்போது விண்வெளி வீரர்களின் சிறுநீர், வியர்வை மற்றும் சுவாசத்திலிருந்து 98 சதவீதம் குடிநீராக மீட்டெடுக்கும் திறன் கொண்டதாக உள்ளது.
நீர் ஒரு முக்கிய வளமாகும், மேலும் அது கிரகத்திலிருந்து 400 கிலோமீட்டர்களுக்கு மேல் சுற்றும் போது அது மிகவும் அரிதாகிவிடும். சர்வதேச விண்வெளி நிலையம், விண்வெளியில் தண்ணீர் கிடைக்கச் செய்யும் வகையில் நாசா ஆச்சரியமூட்டும் சோதனையை மேற்கொண்டது. அதில் விண்வெளி வீரர்களின் சிறுநீர் மற்றும் வியர்வையை மறுசுழற்சி செய்ததன் மூலம் கிட்டத்தட்ட 98% தண்ணீராக மாற்றப்பட்டது என நாசா அறிவித்தது.
நாசாவின் கூற்றுப்படி, விண்வெளி நிலையத்தில் உள்ள சுற்றுச்சூழல் கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை ஆதரவு அமைப்பு (ECLSS) இந்த சோதனை முயற்சியை மேற்கொண்டதில் 98 சதவீதம் தண்ணீராக மாற்றப்பட்டது என சமீபத்தில் நிரூபித்தது. ECLSS நீர் மீட்கும் திறன் கொண்டுள்ளது. அது கழிவுநீரைச் சேகரித்து அதை நீர் ப்ராசஸர் அமைப்புக்கு அனுப்புகிறது. அது குடிநீரை உற்பத்தி செய்கிறது. இந்த அமைப்பின் ஒரு பகுதி டிஹைமிடிஃபையர்களைப் பயன்படுத்தி வீரர்களின் சுவாசம் மற்றும் வியர்வையை சேகரித்து செயல்படுத்துகிறது.
யூரின் ப்ராசசர் அசெம்பிளி, (யுபிஏ) அமைப்பின் மற்றொரு பகுதி, வேஃக்கும் வடிகட்டுதலைப் பயன்படுத்தி சிறுநீரில் இருந்து தண்ணீரை மீட்டெடுக்கிறது. தொழில்நுட்பத்தின் முந்தைய பதிப்பில், வடிகட்டுதல் அசெம்பிளி தண்ணீர் மற்றும் செறிவூட்டப்பட்ட "சிறுநீர் உப்புநீரை" உருவாக்கியது, அதில் இன்னும் சில மீட்டெடுக்கக்கூடிய தண்ணீர் உள்ளது. சமீபத்தில், இந்த மீதமுள்ள கழிவுநீரை பிரித்தெடுக்க ஒரு பிரைன் பிராசசர் அசெம்பிளி (பிபிஏ) சேர்க்கப்பட்டது.
இதன் மூலம் இந்த அமைப்பு 98 சதவீதம் குடிநீரை உற்பத்தி செய்துள்ளது என்று நாசா கூறியது. நீர் அமைப்பு மேலாளரான கில்லியம் வில்லியம்சனின் கூற்றுப்படி, பிபிஏ-யை நிறுவுவதற்கு முன்பு மொத்த நீர் மீட்பு 93 சதவீதம் முதல் 94 சதவீதம் வரை இருந்தது என்றார்.
பி.பி.ஏ கருவி யு.பி.ஏ ஆல் தயாரிக்கப்பட்ட உப்புநீரை எடுத்து ஒரு ஸ்பெஷல் மைப்பிரேன் வழியாக கொண்டு சென்று இயக்குகிறது. பின்னர் அது தண்ணீரை ஆவியாக்குவதற்கு உப்புநீரின் மீது சூடான, வறண்ட காற்றை செலுத்துகிறது. இந்த செயல்முறை ஈரப்பதமான காற்றை உருவாக்குகிறது, பின்னர் அது வியர்வை மற்றும் மூச்சு நிலையத்தின் நீர் சேகரிப்பு அமைப்புகளால் சேகரிக்கப்படுகிறது.
நீரின் தூய்மை சென்சார்கள் மூலம் சரிபார்க்கப்படுகிறது. நீர் முறையாக மறுசுழற்சி செய்யப்படவில்லை என்றால் அது மீண்டும் செயலாக்கப்படுகிறது. பின்னர், அமைப்பு நுண்ணுயிர் வளர்ச்சியைத் தடுக்க அயோடினைச் சேர்க்கிறது மற்றும் குழுவினரின் பயன்பாட்டிற்காக தண்ணீரை சேமிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.