scorecardresearch

ஒளிரும் பிரகாசமான விண்மீனின் மையத்தை படம் எடுத்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

நமது கிரகத்தில் இருந்து 220 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள NGC 7469 என்ற சுழல் விண்மீனை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் எடுத்துள்ளது.

ஒளிரும் பிரகாசமான விண்மீனின் மையத்தை படம் எடுத்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஐரோப்பிய விண்வெளி முகமையான (இ.எஸ்.ஏ), கனடா விண்வெளி முகமையான (சி.எஸ்.ஏ) ஆகியவை இணைந்து ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கி கடந்த ஆண்டு விண்வெளிக்கு அனுப்பினர். அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கேமரா, சென்சார் எனப் பல கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தை புகைப்படம் எடுத்து அனுப்பியது. இது உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தொடர்ந்து ஆய்வு செய்து பல அரிய நிகழ்வுகளை படம் எடுத்து அனுப்பி வருகிறது. இந்நிலையில், ஒளிரும் பிரகாசமான விண்மீனை தொலைநோக்கி படம் எடுத்து அனுப்பியுள்ளது. நமது கிரகத்தில் இருந்து 220 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள NGC 7469 என்ற சுழல் விண்மீனை படம் எடுத்துள்ளது.

ஏறக்குறைய 90,000 ஒளி ஆண்டுகள் விட்டம் கொண்ட மற்றும் நமது கிரகத்தில் இருந்து 220 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பெகாசஸ் விண்மீன் மண்டலத்தில் இருக்கும் சுழல் விண்மீனை படம் எடுத்து அனுப்பியதை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) பகிர்ந்துள்ளது. இது ஆக்டிவ் விண்மீன் கரு என்று கூறியுள்ளனர்.

NGC 7469-ன் செயலில் உள்ள கேலக்டிக் நியூக்ளியஸ் (active galactic nucleus (AGN)) விண்மீன் மையத்தில் உள்ள கருந்துளையில் விழும் போது தூசி மற்றும் வாயுவால் வெளிப்படும் ஒளியின் காரணமாக மிகவும் பிரகாசமாக உள்ளது. இந்த படம் விண்மீன் வானியலாளர்களுக்கு ஆக்டிவ் கேலக்டிக் நியூக்ளியஸ் மற்றும் நட்சத்திர வெடிப்பு நடவடிக்கைகளுக்கு இடையிலான உறவை ஆய்வு செய்ய உதவுகிறது. ஏனெனில் அதன் AGN 1,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திர வெடிப்பு வளையத்தால் சூழப்பட்டுள்ளது. ஸ்டார்பர்ஸ்ட் என்பது புதிய நட்சத்திரங்களின் உருவாக்கம் சம்பந்தப்பட்ட தீவிர செயல்பாட்டைக் குறிக்கிறது.

NGC 7469 என்பது வானத்தில் நன்கு ஆய்வு செய்யப்பட்ட AGNகளில் ஒன்றாகும், ஆனால் அதன் அமைப்புகளின் கச்சிதமான தன்மை மற்றும் அதிக அளவு தூசி இருப்பதால், அகச்சிவப்பு கதிர்களில் இந்த உறவைப் ஆய்வு செய்ய தேவையான தெளிவுத்திறன் மற்றும் உணர்திறன் ஆகிய இரண்டையும் விஞ்ஞானிகள் அடைவதை கடினமாக்கியது. ஆனால் தற்போது தொலைநோக்கி துல்லியமாக அகச்சிவப்பு திறன் மற்றும் அதி நவீன தொழில்நுட்பத்துடன் படம் எடுத்து அனுப்பி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: James webb space telescope captures the glowing bright heart of a galaxy

Best of Express