அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்ணில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியை விண்ணுக்கு அனுப்பி இருந்தது. இந்த தொலைநோக்கி இதுவரை காணாத ஆதி பிரபஞ்சத்தை படம் பிடித்து அனுப்பி உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன் பிறகு வியாழன் கோளை படம் எடுத்து அனுப்பியது. இவ்வாறு பல புது புது கண்டுபிடிப்புகளை தொலைநோக்கி மூலம் பெறுகிறோம்.
இந்நிலையில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியில் பொருத்தப்பட்டுள்ள ஒரு கருவியில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டுள்ளது. மிட்-இன்ஃப்ராரெட் இன்ஸ்ட்ரூமென்ட் Mid-Infrared Instrument (MIRI) எனக் கூறப்படும் கருவியில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டுள்ளது.
நாசா விஞ்ஞானிகள் சிக்கலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எம்ஐஆர்ஐ கருவியில் நான்கு கண்காணிப்பு முறைகள் உள்ளன- இமேஜிங், குறைந்த ரேசொல்யூசன்
ஸ்பெக்ட்ரோஸ்கோபி, மீடியம் ரேசொல்யூசன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மற்றும் கரோனாகிராஃபிக் இமேஜிங். ஆகஸ்ட் 24ஆம் தேதி மீடியம் ரேசொல்யூசன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி அறிவியல் கண்காணிப்பு அமைப்பின் போது அதிகரித்த உராய்வைக் காட்டியது என நாசாக தெரிவித்துள்ளது.
நாசா கருவியை சோதனை செய்து ஆராய்ந்து கோளாறை சரிசெய்ய கடந்த 6ஆம் தேதி சம்பந்தப்பட்ட குழுவிடம் பரிந்துரைத்தது. இதற்கிடையில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி திட்டக்குழு குறிப்பிட்ட கண்காணிப்பு பயன்முறை ஆராய்ச்சியை இடைநிறுத்தியுள்ளது.
எம்ஐஆர்ஐ கருவியின் மற்ற 3 முறைகள் சீராக இயங்குவதால், தொலைநோக்கி தொடர்ந்து நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது என நாசா தெரிவித்துள்ளது. மேலும், தொலைநோக்கி எதிர்கொள்ளும் முதல் கோளாறு இது இல்லை. இந்த ஆண்டு ஜூலையில், 19 சிறிய விண்வெளிப் பாறைகளால் தொலைநோக்கி சேதமடைந்தது. தொலைநோக்கியில் உள்ள18 கண்ணாடிகளில் ஒன்றில் பாறை சற்று கடினாமான சேதத்தை ஏற்படுத்தியது என நாசா தெரிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil