ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) பிரபஞ்சத்தில் மில்லியன் கணக்கான சூப்பர்மாசிவ் நட்சத்திரங்கள் மறைந்திருக்கலாம் என்பதற்கான முதல் ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளது என்று லைவ் சயின்ஸ் தெரிவித்துள்ளது. . இதுவரை, எங்கும் காணப்பட்ட மிகப்பெரிய நட்சத்திரங்கள் நமது சூரியனை விட 300 மடங்கு அதிக எடை கொண்டவையாக இருந்தன.
ஆனால் புதிய ஆய்வில் மிகப்பெரிய நட்சத்திரத்தின் எடை சூரியனை விட 5,000 முதல் 10,000 மடங்கு பெரியதாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. பிக் பேங்கிற்குப் பிறகு 440 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய இந்த மாபெரும் நட்சத்திரங்களை ஆராய்ச்சியாளர்கள் 'செலஸ்டியல் மான்ஸ்டர்' ( Celestial Monsters) என்று அழைக்கின்றனர். ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
ஆய்வின் முதன்மை ஆசிரியர், சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியர் Corinne Charbonnel கூறுகையில், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கிக்கு நன்றி. தொலைநோக்கி இந்த தகவல்களை சேகரித்து அனுப்பியுள்ளது. இந்த செலஸ்டியல் மான்ஸ்டர் நட்சத்திரங்கள் சூரியனை விட 5,000 முதல் 10,000 மடங்கு பெரியதாகவும், அவற்றின் மையத்தில் ஐந்து மடங்கு வெப்பமாகவும் (75 மில்லியன் °C) உள்ளதாக கூறியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil