அமெரிக்காவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. உலகம் அறிந்திராக பல தகவல்களை கண்டுபிடித்து வருகிறது. அந்த வகையில், 340 ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த ஒரு நட்சத்திரத்தின் எச்சங்களை படம்பிடித்து அனுப்பி உள்ளது.
Advertisment
சூப்பர்நோவா என்பது பூமியில் இருந்து கவனிக்கப்பட்ட மிகப்பெரிய நட்சத்திர வெடிப்பாகும். இது நமது சூரியனை விட ஐந்து மடங்கு கனமானது. ஐந்து மடங்கு கனமான எரிபொருள் தீர்ந்து வெடிக்கும் போது இது நிகழ்கிறது. இந்தநிலையில் ஜேம்ஸ் வெப் சூப்பர்நோவா வெடிப்பின் போது சிதறிய எச்சங்களை படம்பிடித்து அனுப்பி உள்ளது. அகச்சிவப்பு படமான அது சூப்பர்நோவா எச்சமான காசியோபியா ஏ (காஸ் ஏ) எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நட்சத்திரம் 340 ஆண்டுகளுக்கு முன்பு வெடித்தது. இது விண்வெளியில் நிகழ்ந்த மிகப்பெரிய வெடிப்பாகும். காஸ்மிக் கால அளவில், வெடிப்பு புதியது மற்றும் அதன் ஆரம்ப தருணங்களில், அத்தகைய சூப்பர்நோவாக்கள் எவ்வாறு நிகழ்கின்றன என்பதைப் பற்றி மேலும் அறிய ஒரு தனித்துவமான வாய்ப்பை இது வழங்குகிறது.
காஸ் ஏ என்பது வெடித்த நட்சத்திரத்தின் எச்சமாகும். இது சூப்பர்நோவா மற்றும் நட்சத்திரம் வெடிப்பு குறித்தான ஆய்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நட்சத்திரம் தொடர்பான ஆய்வுக்கு இது சிறந்த வாய்ப்பை அளிக்கும் என் பர்டூ பல்கலைக்கழகத்தின் டேனி மிலிசாவல்ஜெவிக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“