ஜப்பானின் ஹகுடோ-ஆர் லேண்டருடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ரஷித் ரோவர் நிலவில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்வதற்காக கடந்தாண்டு டிசம்பர் மாதம் அனுப்பபட்டது. சுமார் 5 மாதப் பயணத்திற்குப் பிறகு உலகின் முதல் தனியார் லேண்டர் நேற்று (புதன்கிழமை) தரையிறங்க உள்ளதாக ஜப்பான் தனியார் விண்வெளி நிறுவனம் அறிவித்தது.
உலகம் நாடுகள் பலரும் இந்த திட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் ஹகுடோ-ஆர் லேண்டர் நிலவில் தரையிறங்கும் சில நொடிகளுக்கு முன் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு லேண்டர் நிலவில் விழுந்து நொறுங்கிதாக விஞ்ஞானிகள் கூறினர். மேலும் எமிரேட்ஸின் ரஷித் ரோவர் உடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டது.
ஜப்பானின் டோக்கியோவை தலைமையிடமாக கொண்ட ஐஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனம் லேண்டரை உருவாக்கியது.
ஐஸ்பேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நிலவின் மேற்பரப்பில் லேண்டர் தரையிறங்கும் வகையில் திட்டமிடப்பட்டது. அதன்படி லேண்டர் தரையிறங்கும் போது இறுதி நிமிடத்தில் லேண்டர் கடினமாக தரையிறங்கியதால் அது தொடர்பு துண்டிக்கப்பட்டு செயலிழந்தது. எல்லாம் சரியாக நடந்திருந்தால், நிலவில் லேண்டரை தரையிறக்கிய முதல் தனியார் நிறுவனம் என ஐஸ்பேஸின் வரலாறு இருந்திருக்கும். லேண்டர் இறுதியாக 33 அடி (10 மீட்டர்) தூரம் இருக்கும் நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது " என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த ஆண்டுக்கான இரண்டாவது மூன்ஷாட் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நிலவு திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே நிலவில் வெற்றிகரமாக தங்கள் ஆளில்லா விண்கலத்தை தரையிறக்கி உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“