டோக்கியோவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனம் ஐஸ்பேஸ் (Ispace)தனது சொந்த லேண்டர் மற்றும் பொம்மை போன்ற ரோபோ மற்றம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் லூனார் ரோவர் ஆகியவற்றுடன் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் நேற்று (டிசம்பர் 11) ஞாயிற்றுக்கிழமை ஏவப்பட்டது. லேண்டர் மற்றும் அதன் ஆய்வு பொருட்கள் நிலவைச் சென்றடைய கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்பேஸ் நிறுவனம் தனது லேண்டரை குறைந்த எரிபொருள் பயன்படுத்தி பணத்தை மிச்சப்படுத்தவும், சரக்குகளுக்கு அதிக இடமளிக்கவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே அது சந்திரனுக்கு மெதுவான, குறைந்த ஆற்றல் கொண்ட பாதையில் செல்கிறது. பூமியில் இருந்து 1 மில்லியன் மைல்கள் (1.6 மில்லியன் கிலோமீட்டர்) பறந்து சென்று ஏப்ரல் மாத இறுதியில் நிலவை அடைகிறது.
முன்னதாக நிலவுக்கு சோதனை டம்மிகளுடன் அனுப்பபட்ட நாசாவின் ஓரியன் விண்கலம் 5 நாட்களில் நிலவை சென்றடைந்தது.
ஐஸ்பேஸ் நிறுவனத்தின் லேண்டர், சந்திரனின் வடகிழக்கு பகுதியில், 50 மைல்களுக்கு (87 கிலோமீட்டர்) குறுக்கே 1 மைல் (2 கிலோமீட்டர்) ஆழத்தில் உள்ள அட்லஸ் பள்ளத்தை இலக்காகக் கொண்டுள்ளது. லேண்டர் 4 கால்களை கொண்ட இயந்திரம். அது நிலவில் இறங்கி ஆய்வு செய்யும். லேண்டர் 7 அடி (2.3 மீட்டர்) உயரத்திற்கு மேல் உள்ளது.
எமிரேட்ஸ் திட்ட மேலாளர் ஹமத் அல்மர்சூகி கூறுகையில், நிலவின் ஆய்வு செய்யப்படாத பகுதியில் தரையிறங்குவது "புதுமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க" அறிவியல் தரவுகளை வழங்கும். மேலும், சந்திர மேற்பரப்பு புதிய தொழில்நுட்பத்தை சோதிக்க "ஒரு சிறந்த தளம்" ஆகும். இந்த ஆய்வு செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் பயணம் செய்யும் திட்டத்திற்கு பயன்படுத்தப்படலாம் என்று கூறினார்.
நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தில் நிலவுக்கு அனுப்பபட்ட ஓரியன் விண்கலம் 25 நாட்கள் பயணத்தை முடித்து நேற்று பசிபிக் பெருங்கடல் பகுதியில் தரையிறங்கியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/