/tamil-ie/media/media_files/uploads/2022/04/University-of-tokyo-banana-peeling-robot.jpg)
ஜப்பானில் ரோபோட்கள் வாழைப்பழத்தை கையில் எடுத்து 3 நிமிடங்களில் மிகச் சரியாக உரித்து காட்டி அசத்தியுள்ளன.
டோக்கியோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ரோபா ஒன்று ஒரு வாழைப்பழத்தை 3 நிமிடங்களில் உரித்துக் காட்டிய வீடியோவை பகிர்ந்தனர்.
இதன்மூலம், எதிர்காலத்தில் ரோபோக்கள் பல நுட்பமான வேலைகளையும் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் Heecheol Kim, Yoshiyuki Ohmura மற்றும் Yasuo Kuniyoshi ஆகியோர் இந்த ரோபோக்களுக்கு பயிற்சி அளித்தனர்.
வாழைப்பழத்தை உரிக்கும் செயலை நூற்றுக்கணக்கான முறை செய்ய செய்து போதுமான தரவுகளை உருவாக்கினர்.
13 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த பயிற்சிக்கு பின், வாழைப்பழத்தை ரோபோ சரியாக உரித்தது.
இன்னும் கூடுதலான சோதனைகளை மேற்கொள்ளும் போது மனிதர்கள் செய்யும் பல்வேறு பணிகளைச் செய்வதற்கு ரோபோக்களை கற்பிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
WhatsApp: ஒன்பிளஸ், ரியல்மி யூசரா நீங்க? இந்த ட்ரிக் தெரிஞ்சா டெலிட் செய்த மெசேஜை ஈஸியா படிக்கலாம்
சிறந்த பயிற்சி பெற்ற ரோபோக்கள் ஜப்பானின் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னைகளை நீக்க உதவும். உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் ரோபோக்களின் பணிகள் மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.