கருந்துளைகளில் இருந்து வெளிவரும் ரேடியோ ஜெட் என்ன செய்கிறது.. புதிய ஆய்வு கண்டுபிடிப்பு என்ன?

கருந்துளைகளில் இருந்து வெளிவரும் ரேடியோ ஜெட் விண்மீன் திரள்களில் வாயுவை ஏற்படுத்திகிறது என்று புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

black-hole
black-hole

புனேவில் உள்ள வானியல் மற்றும் வானியற்பியல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உள்பட ஒரு சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வு ஒன்று மேற்கொண்டனர். கருந்துளைகளில் இருந்து வெளிவரும் ரேடியோ ஜெட் விண்மீன் திரள்களில் உள்ள வாயுவை கலைக்கிறது. இது ‘டீக்கப் விண்மீன்’ என்று அழைக்கப்படுகிறது.

ரேடியோ ஜெட் ஒளியின் வேகத்திற்கு அருகில் நகர்ந்து மிகப்பெரிய கருந்துளைகளால் ஏவப்படுகின்றன. விண்மீன் திரள்களில் உள்ள வாயுவுடன் இத்தகைய பொருள் ஜெட் தொடர்பு கொள்ளலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் குழு அவர்களின் ஆராய்ச்சியில், அத்தகைய ஜெட், விண்மீன் மண்டலத்தில் உள்ள வாயுவை கணிசமான அளவு தொந்தரவு செய்கிறது எனக் கண்டறிந்துள்ளனர்.

டீக்கப் கேலக்ஸி என்று பெயரிடப்பட்ட ஒரு பாரிய குவாசரைச் சுற்றியுள்ள குளிர் வாயுவுடன் ரேடியோ ஜெட் தொடர்புகளை சர்வதேச குழு ஆய்வு செய்தது. டீக்கப் என்பது 1.3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ரேடியோ குவாசர் ஆகும். டீக்கப்பின் கைப்பிடியைப் போல் இந்த குவாசர் இருப்பதால் இது டீக்கப் கேலக்ஸி என்று பெயரிடப்பட்டது.

இந்த ஆய்வின் மூலம் கண்காணிக்கப்பட்ட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஜெட் அதன் பாதையில் உள்ள வாயுவை மட்டுமல்ல, அதிலிருந்து வெகு உள்ள பகுதிகளையும் தொந்தரவு செய்கிறது. இது ஜெட் உருவாக்கும் சூடான வாயுக் குமிழியால் விளைகிறது என்று கூறப்பட்டுள்ளது. இதை நேரடியாக கவனிப்பது எளிதல்ல. ஆனால் எல்லா திசைகளிலும் விரிவடைகிறது, எல்லா இடங்களிலும் வாயுவைத் தொந்தரவு செய்கிறது என்று ஆய்வின் இணை ஆசிரியரான பேராசிரியர் திபஞ்சன் முகர்ஜி கூறினார்.

இந்த ஆய்வுக்கு அஸ்ட்ரோஃபிசிகா டி கனாரியாஸ் (ஐஏசி) வைச் சேர்ந்து டாக்டர் அனெலிஸ் ஆடிபெர்ட் மற்றும் டாக்டர் கிறிஸ்டினா ராமோஸ் அல்மேடா ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும் IUCAA வின் இணை ஆசிரியர்களான பேராசிரியர் முகர்ஜி மற்றும் பிஎச்டி மாணவி மீனாட்சி ஆகியோரும் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: Jets from black holes stirring gas in galaxies finds new study

Exit mobile version