சந்திர சுற்றுப்பாதையில் நுழைந்த சில மாதங்களுக்குப் பிறகு, தென் கொரியாவின் தனூரி விண்கலம் நிலவில் உள்ள பள்ளங்களை துல்லியமாக விரிவாக காணும் வகையில் படம் எடுத்து அனுப்பியுள்ளது.
Advertisment
கொரியா ஏரோஸ்பேஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் (கேஆர்ஐ) கொரியா பாத்ஃபைண்டர் லூனார் ஆர்பிட்டர் (கேபிஎல்ஓ) விண்கலத்தை இயக்கி வருகிறது. சந்திரனை சுற்றி வரும் விண்கலம் சந்திர மேற்பரப்பில் உள்ள 4 பள்ளத் தாக்களை படம் எடுத்து அனுப்பியுள்ளது. நிலவின் மேற்பரப்பு அம்சங்களையும் ரெகோலித்தில் (சந்திர மண் மற்றும் தூசி) சுற்றிக் காட்டுகின்றன.
ஏப்ரல் மாதத்தில் இந்த விண்கலம் 4 பள்ளத் தாக்கின் படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. சியோல்கோவ்ஸ்கி பள்ளம், ஷ்ரோடிங்கர் பள்ளத்தாக்கு, விச்மேன் க்ரேட்டர் மற்றும் சிலார்ட் எம் பள்ளத் தாக்குகளை துல்லியமாகவும், தெளிவாகவும் படம் எடுத்து அனுப்பி உள்ளது.
சியோல்கோவ்ஸ்கி பள்ளம் சந்திரனின் தொலைவில் உள்ளது, 128.5 டிகிரி கிழக்கிலும் மற்றும் சந்திரனில் 20.5 டிகிரி தெற்கு பகுதியில் உள்ளது. முன்னதாக இந்த பள்ளத்தாக்கை அப்பல்லோ-13 விண்வெளி வீரர்கள் படம் எடுத்துள்ளனர். சர்வீஸ் மாட்யூலில் (SM) ஆக்சிஜன் டேங்க் எண் இரண்டு வெடித்ததால், அவர்கள் திட்டமிடப்பட்ட சந்திர தரையிறக்கத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தது, அந்த நேரத்தில் அப்பல்லோ-13 மிஷன் விண்வெளி வீரர்கள் குழு இந்த பள்ளத் தாக்கை படம் எடுத்து சென்றது.
தனூரி விண்கலத்தில் உள்ள உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமரா மூலம் பள்ளத் தாக்குகள் படம் எடுக்கப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“