Advertisment

ஆர்ட்டெமிஸ்-1: விரைவில் 3ஆவது முயற்சி.. முன்னதாக டேங்கிங் சோதனை நடத்த நாசா திட்டம்!

ஆர்ட்டெமிஸ்-1 ஏவுதல் திட்டம் 2 முறை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், 3ஆவது முயற்சி மேற்கொள்ளும் முன்னதாக டேங்கிங் சோதனை நடத்த நாசா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
ஆர்ட்டெமிஸ்-1: விரைவில் 3ஆவது முயற்சி.. முன்னதாக டேங்கிங் சோதனை நடத்த நாசா திட்டம்!

ஆர்ட்டெமிஸ் திட்டம் மூலம் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் பணியில் நாசா ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சோதனை முயற்சியாக ஆளில்லா விண்கலம் மற்றும் ராக்கெட் ஏவும் பணியில் ஈடுபட்டது. கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் முறையாக விண்வெளி ஏவுகணை அமைப்பு (SLS) ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது. ஆனால் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுதல் நிறுத்திவைக்கப்பட்டது. ராக்கெட்டின் 4 என்ஜின்களில் 3 ஆவது என்ஜின் செயலிழந்ததாக திட்டக்குழு தெரிவித்தது. இதையடுத்து ஏவுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தது.

Advertisment

இதையடுத்து பழுது சரிபார்க்கப்பட்ட பிறகு, 2ஆவது முறையாக செப்டம்பர் 3ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 11.47 மணிக்கு நிலவுக்கு செலுத்தப்பட இருந்தது. ஆனால் திடீரென திரவ ஹைட்ரஜன் கசிவு ஏற்பட்டது. பொறியாளர்கள் உடனடியாக கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், ராக்கெட் ஏவும் பணிகளை மீண்டும் நிறுத்தி வைப்பதாக திட்டத்தின் இயக்குநர் சார்லி பிளாக்வெல்-தாம்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்தநிலையில், எரிபொருள் கசிவு, என்ஜின் கோளாறு மற்றும் பிற சிக்கல்கள் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

ராக்கெட்டின் மைய நிலையிலிருந்து திரவ ஹைட்ரஜனை நிரப்பவும் வடிகட்டவும் பயன்படுத்தப்படும் 8-இன்ச் கோடு மற்றும் டேங்கிங் நடவடிக்கைகளின் போது சில உந்துசக்திகளைத் திருப்பிவிடப் பயன்படுத்தப்படும் 4-இன்ச் ப்ளீட் லைன் இரண்டும் அகற்றப்பட்டு மாற்றப்பட்டுள்ளன" என்று நாசா தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப சிக்கல்கள் ஏவுதளத்தில் வைக்கப்பட்டு சரி செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது எஞ்ஜின் எரிபொருள் கசிவுகள் சரி செய்யப்பட்டுள்ள நிலையில், ராக்கெட்டின் நிலைத்தன்மையை சோதிக்க டேங்கிங் ஆபரேஷன் நடத்த நாசா திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 17ஆம் தேதி டேங்கிங் ஆபரேஷனுக்கு முன்னதாக ஆராய்ச்சியாளர்கள் அப்பிளிக்கல் பிளேட்களை மீண்டும் இணைத்து, ஆய்வு செய்ய உள்ளனர்.

ஆய்வின் போது புதிதாக மாற்றப்பட்ட ராக்கெட் சீல், கிரையோஜெனிக் அல்லது சூப்பர்கோல்ட் நிலைகள் குறித்து கண்காணிக்கப்படும். டேங்கிங் சோதனையின் போது, ராக்கெட் மைய நிலை பகுதியில் திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஆக்சிஜனை நிரப்பி ஆய்வு செய்யப்படும். பொறியாளர்கள் கசிவு ஏதும் ஏற்படாமல் இருப்பதையும், கோளாறு சரிசெய்யப்பட்டதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

ஆர்ட்டெமிஸ்-1 திட்டமான விண்வெளி ஏவுகணை அமைப்பு (SLS) ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலத்தை செப்டம்பர் 23அன்று மீண்டும் நிலவுக்கு ஏவ நாசா திட்டமிட்டுள்ளது. 2 முறை திட்டம் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 23 மூன்றாவது முறையாக நிலவுக்கு ஏவ திட்டமிட்டுள்ளது.

அந்த முயற்சியும் ஒத்திவைக்கப்பட்டால், செப்டம்பர் 27 அன்று 4ஆவது முறையாக மீண்டும் ஒருமுறை ஏவப்படும். ஆனால் இந்த முறை கட்டுபாடுகளுடன் ஏவப்படும். அதாவது 70 நிமிடங்களுக்குள் ஏவுதல் நடத்தப்பட வேண்டும் என்பதாகும் என்று நாசா தெரிவித்துள்ளது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment