இணையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் கொண்ட, ஆபத்தான பிரவுசர்கள் பட்டியலில், கூகுள் குரோம் பிரவுசர் முதலிடத்தில் உள்ளது. கூகுள், கூகுள் குரோம், பயர்பாக்ஸ் போன்ற பிரவுசர்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. சர்ச் என்ஜின் பயன்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் உடனடியாக கூகுள் சென்று பார்க்கிறோம். ஆன்லைன் ஷாப்பிங் முதல் அனைத்திற்கும் இணையதளத்தை பயன்படுத்துகிறோம். அனைத்தும் டிஜிட்டல் மையமாகி வருகிறது.
முன்பு புத்தகங்கள் படித்து தகவல் தெரிந்து கொண்டனர். இப்போது அனைத்தும் இணையத்தில் தெரிந்து கொள்கிறோம். எவ்வித தகவலாக இருந்தாலும் இணையத்தில் தேடி தெரிந்து கொள்கிறோம். அந்தளவிற்கு இணைய பயன்பாடு அதிகரித்துள்ளது. இதில் நன்மைகளும் உள்ளன, தீமைகளும் உள்ளன.
தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி சைபர் கிரைம் மோசடி சம்பவங்களும் நடக்கின்றன. அரசும் இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. கூகுள், கூகுள் குரோம் போன்றவற்றை அவ்வப்போது அப்டேட் செய்யும்படி அரசாங்கம் பயனர்களை எச்சரிக்கும். காரணம் பக், பாதுகாப்பு குறைப்பாடு. ஹேக்கிங் போன்ற அச்சுறுத்தலால் அப்டேட் செய்து கொள்ளும்படி கூறுவார்கள். இந்தநிலையில், அட்லஸ் விபிஎன் (Atlas VPN) என்ற நிறுவனம் மிகவும் ஆபத்தான பிரவுசர்கள் குறித்து சமீபத்தில் ஆய்வு செய்தது.
பல்வேறு பிரவுசர்கள் கூகுள், கூகுள் குரோம், பயர்பாக்ஸ், மைக்ரோசாப்ட் எட்ஜ் போன்ற பிரவுசர்களை கொண்டு ஆய்வு செய்தது. இதில், மிகவும் ஆபத்தான பிரவுசர்கள் பட்டியலில் கூகுள் குரோம் முதலிடத்தில் உள்ளது. ஜனவரி 1ஆம் தேதி முதல் அக்டோபர் 5 2022 வரையிலான தரவுகளை வைத்து, அட்லஸ் விபிஎன் ஆய்வு செய்ததில், அக்டோபரில் மட்டும் 5 முறை பாதுகாப்பு குறைபாடு காணப்பட்டதாக கூறியுள்ளது.
CVE-2022-3318, CVE-2022-3314, CVE-2022-3311, CVE-2022-3309, CVE-2022-3307 என பாதிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
Common Vulnerabilities and Exposures என்பதன் சுருக்கமான CVE ஆகும். பல தளங்களில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடுகளை மற்றும் பாதிப்புகளை கண்காணிக்கிறது. கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசரில் 2022ஆம் ஆண்டில் மட்டும் 303 பாதிப்புகளும், ஒட்டுமொத்தமாக 3,159 பாதிப்புகளும் கண்டறியப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பயனர்கள் தங்களது குரோமை அப்டேட் செய்து இந்த பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம் எனக் கூறியுள்ளது. குரோமிற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில், மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் 117 குறைபாடுகளை கண்டு, சரி செய்துள்ளது. மைக்ரோசாப்ட் எட்ஜ் 103 பாதிப்புகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது.
சஃபாரி (Safari) வெறும் 26 பாதிப்புகளை கொண்டுள்ளது. அது ஆரம்பிக்கப்பட்ட ஆண்டில் இருந்து மொத்தம் 1,139 பாதுகாப்பு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓப்பேரா (Opera) பிரௌசரில் இந்தாண்டு எந்த பாதிப்புகளும் கண்டறியப்படவில்லை. மொத்தமாகவே, அதில் 244 பாதிப்புகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. குறைந்த பாதிப்புகளுடன் ஓப்பேரா 6ஆவது இடத்தில் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.