சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் அபாயக் கண்டறிதல் மற்றும் தவிர்ப்பு கேமரா (LHDAC) மூலம் எடுக்கப்பட்ட நிலவின் தொலைதூரப் பகுதி படங்களை இஸ்ரோ இன்று (ஆகஸ்ட் 21) திங்களன்று வெளியிட்டது.
நிலவில் பாறைகள், ஆழமான அகழிகள் இல்லாமல் பாதுகாப்பான தரையிறங்கும் பகுதியைக் கண்டறிய உதவும் இந்தக் கேமரா இஸ்ரோவின் முக்கிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான அகமதாபாத்தைச் சேர்ந்த ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் சென்டர் மூலம் (SAC) வடிவமைக்கப்பட்டது.
இஸ்ரோ கூறுகையில், சந்திரயான்-3-ன் பணி நோக்கங்களை அடைய, LHDAC போன்ற பல மேம்பட்ட தொழில்நுட்பங்கள் லேண்டரில் பொருத்தப்பட்டுள்ளன என்று கூறியது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. பூமி சுற்றுப் பாதை, நிலவு சுற்றுப் பாதை பணிகளை நிறைவு செய்து, தரையிறங்குவதற்கான இறுதிக் கட்ட பணிகளை செய்து வருகிறது.
ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 6.04 மணியளவில் நிலவின் மேற்பரப்பில் விண்கலம் தரையிறங்கும் என இஸ்ரோ கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“