இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஏவப்படும் சந்திரயான்-3 (Ch-3) விண்கலத்தின் முதன்மை நோக்கம் துல்லியமாக தரையிறக்குவதே ஆகும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் எஸ். சோம்நாத் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் அமதாபாத்தில் இஸ்ரோவின் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் 3 நாள் இந்திய கோள் அறிவியல் மாநாடு நேற்று (மார்ச் 22) தொடங்கியது. நிகழ்ச்சியில் கலந்த கொண்ட சோம்நாத், இஸ்ரோவின் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து விளக்கினார். குறிப்பாக நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பபட உள்ள சந்திரயான்-3 விண்கலப் பணிகள் குறித்து பேசினார். அவர் பேசுகையில், சந்திரயான்-3 விண்கலப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. சில திருத்தப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. சந்திரயான்-3 விண்கலம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளோம். இந்த விண்கலமும் சந்திரயான்-2 போன்றே ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய அமைப்பைக் கொண்டிருக்கும். நிலவின் சுற்றுப்பாதைக்கு லேண்டரை எடுத்துச் சென்று அதனை துல்லியமாக தரையிறக்குவதையே நோக்கமாக கொண்டுள்ளோம் என்றார்.
இதன் முந்தைய திட்டமான சந்திரயான்-2 விண்கலம் லேண்டர் தரையிரங்கும் சில நிமிடங்களுக்கு முன்னதாக கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு லேண்டர் மற்றும் ரோவர் செயலிழந்தது.
தொடர்ந்து சோம்நாத் பேசுகையில், "மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் குறித்து பேசினார். திட்டத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். ககன்யான் உயர்ந்த இலக்குகளை அடைவதை நோக்கமாக கொண்டிருந்தாலும், தற்போது வரை நல்ல அறிவியல் நோக்கங்களை கொண்டிருக்கவில்லை. இதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.
மேலும், சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் சோலார் மிஷன் ஆதித்யா-எல்1 விண்கலம் மிகவும் தனித்துவமான சூரிய கண்காணிப்பு திறனாக இருக்கும் என்றார். திட்டத்திற்கான ருவிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அவற்றை செயற்கைக்கோளில் ஒருங்கிணைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“