செவ்வாய் கிரகத்தில் மெகா சுனாமி சிக்சுலப் (Chicxulub) சிறுகோள் தாக்கத்தைப் போன்று ஏற்பட்டிருக்க கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சிக்சுலப் சிறுகோள் பூமியில் டைனோசர்கள் இனம் அழிவிற்கு வழிவகுத்த ஒரு பெரிய தாக்கம் ஆகும். முன்னதாக, மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய்கிரகத்தின் வடக்கு பகுதி கடலில் ஒரு சிறுகோள் தாக்கம் சுனாமியை ஏற்படுத்தியது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சிறுகோள் தாக்கம் ஏற்பட்ட பள்ளம் 110 கிலோமீட்டர் விட்டம் கொண்டது என்றும் பிற்காலத்தில் கடலால் மூடப்பட்டிருக்கலாம் என்றும் முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன. புதிய ஆய்வின் ஆசிரியர்கள் இந்த பள்ளம் சுமார் 3.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சிறுகோள் தாக்கத்தால்
உருவாகியிருக்கலாம் என்று கூறுகின்றனர்.
இதையடுத்து, ஆராய்ச்சியாளர்கள் இந்த பகுதியில் சிறுகோள் மோதல்களை உருவகப்படுத்தி, இந்த பள்ளம் உருவாக காரணம் மற்றும் மெகா சுனாமிக்கு வழிவகுத்தது என்ன வகையான தாக்கம் என்பது குறித்து ஆய்வு செய்தனர். வலுவான நில எதிர்ப்பை எதிர்கொண்ட 9 கிலோமீட்டர் சிறுகோள்
அல்லது பலவீனமான தரை எதிர்ப்பை எதிர்கொண்ட 3 கிலோமீட்டர் சிறுகோள் ஆகியவற்றால் இதேபோன்ற பள்ளங்கள் ஏற்பட்டிருக்க கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய மோதல்கள் முறையே 13 மில்லியன் மெகா டன் டி.என்.டி ஆற்றல் அல்லது 0.5 மில்லியன் மெகா டன் ஆற்றல் வெளிபடுத்தி இருக்கலாம்.
இதுவரை சோதனை செய்யப்பட்டதில் மிகவும் சக்திவாய்ந்த தெர்மோ நியூக்ளியர் ஆயுதமான Tsar Bomba, சுமார் 57 டன் டி.என்.டி ஆற்றலை வெளியிட்டுள்ளது. ஆனால் செவ்வாய் கிரக தாக்குதலும்
இதே அளவு 110 கிலோமீட்டர் விட்டம் கொண்ட பள்ளங்களை உருவாக்கியுள்ளது. சுனாமி தாக்கத்தை ஏற்படுத்தியது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பெரிய அளவிலான சுனாமிகள், நில நடுக்கத்தை தூண்டியிருக்கும் சிக்சுலப் சிறுகோள் தாக்கத்துடன் இந்த தாக்கம் நிறைய ஒற்றுமைகளை கொண்டிருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“