Advertisment

அந்தரத்தில் காட்சியளிக்கும் பிரம்மாண்ட கப்பல்... பின்னணி அறிவியல் என்ன?

புகைப்படக் கலைஞர் மார்ட்டின் ஸ்ட்ரோட் கிராமத்தில் உலா வரும் போது வியக்க வைக்கும் இந்த படத்தை எடுத்தார்.

author-image
WebDesk
New Update
Optical illusion

Massive ship floating in the air science behind the picture

பிரிட்டிஷ் கடற்கரைக்கு அப்பால் காற்றில் மிதக்கும் ஒரு பாரிய கப்பலின் புகைப்படம்,  பார்வையாளர்களை திகைக்க வைத்துள்ளது.

Advertisment

இந்த வினோத படம்’ இங்கிலாந்தின் கார்ன்வாலில் உள்ள சிறிய கிராமமான கவர்க் அருகே எடுக்கப்பட்டது. பார்க்கும் போது, அந்த பெரிய சரக்குக் கப்பல் அடிவானத்திற்கு மேலே உயர்ந்து வருவதாகத் தெரிகிறது. புகைப்படக் கலைஞர் மார்ட்டின் ஸ்ட்ரோட் கிராமத்தில் உலா வரும் போது வியக்க வைக்கும் இந்த படத்தை எடுத்தார்.

இதைப் பார்த்து சிலர் புரியாமல் குழப்பத்தில் உள்ளனர். ஆனால், இந்த வினோத படத்துக்கு பின்னால் ஒரு எளிய விளக்கமே உள்ளது. ஃபாட்டா மோர்கானா (Fata Morgana) என்று அழைக்கப்படும், கடலின் நிறம் அதற்கு மேலே உள்ள வானத்துடன் சரியாகப் பொருந்தும்போது இந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதனால் கப்பல் ஒளிவிலகல் (refraction) செயல்முறையின் மூலம், அந்தரத்தில் மிதப்பதாக தெரிகிறது.

தொடுவானக் கோடு (horizon line) தொங்கும் நீரின் மேல் அமர்ந்திருப்பதால் இப்படி தெரிவது மிகவும் யதார்த்தமானது.

இந்த வார்த்தைக்கு இத்தாலிய மொழியில் "மோர்கன் தி ஃபேரி" என்று பொருள், இது சூனியக்காரி மார்தா லா ஃபேயின் ஆர்தரிய புராணத்திலிருந்து வந்தது.

மாலுமிகளை அவர்களின் மரணத்திற்கு கவர்ந்திழுப்பதற்காக சூனியக்காரி மார்தா, விசித்திர அரண்மனைகள் அல்லது போலி தீவுகளை அற்புதங்களுடன் கற்பனை செய்தார் என்பது நம்பிக்கை.

பிரபலமான பறக்கும் டச்சுக்காரர் போன்ற விசித்திரமான காட்சிகளின் வரம்பிற்கு ஃபாட்டா மோர்கனா காரணம் என்று கருதப்படுகிறது.

இந்த படம் உள்ளூர் பேஸ்புக் குழுவில் உள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, இது "ஒரு அற்புதமான ஷாட்" என்று விவரிக்கிறது. இத்தகைய நிகழ்வு கார்ன்வாலில் இதற்கு முன்பு காணப்பட்டது.

கடந்த ஆண்டு டேவிட் மோரிஸ் கில்லான் கோ’ இதே போன்ற ஒரு நிகழ்வை படம்பிடித்தார். அலைகளுக்கு சற்று மேலே மிதந்து கொண்டிருந்த ஒரு பெரிய கப்பலைக் கண்டபோது அவர் "மிகவும் குழப்பமடைந்தார்".

சில நாட்களுக்கு முன்பு, டெவோனின் பைக்டன் கடற்கரையில் பல பயணக் கப்பல்கள் நீர்நிலைகளுக்கு மேலே  அந்தரத்தில் பயணம் செய்வது போல காணப்பட்டன.

அந்த நேரத்தில் பிபிசி வானிலை ஆய்வாளர் டேவிட் பிரைன் ஒரு "சுப்ரியர் மிரஜ் (superior mirage) " என்று விவரித்தார், இது ஆர்க்டிக்கில் பொதுவானது ஆனால் இங்கிலாந்தில் "மிகவும் அரிதாக" மட்டுமே நிகழும்.

பார்வைக் கோட்டிற்குக் கீழே உள்ள காற்று குளிர்ச்சியாகவும், அதன் மேல் உள்ள காற்றை விட அடர்த்தியாகவும் இருக்கும் போது, படம் உண்மையான பொருளுக்கு மேலே அமைந்துள்ளதாகத் தோன்றுகிறது.

இது 'வெப்பநிலை தலைகீழ்' (temperature inversion) என்று அழைக்கப்படுவதன் மூலம் ஒளிக்கதிர்கள் கீழ்நோக்கி வளைகிறது.

2017 இல் போர்த்லெவனில் உள்ள ரோஸி பேட்டர்சன்’ துறைமுகத்தின் கடற்கரையில் 'பறக்கும்' கண்டெய்னர் கப்பலை படம்பிடித்தார்.

அந்த நேரத்தில் இது ஒரு அரிய வானிலை நிலை என்று விளக்கப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Science
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment