அமெரிக்க விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையத்தின் தகவல் படி, சூரியனிலிருந்து மிகப் பெரிய புயல் புவியை தாக்கியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அதன் தாக்கம் ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவிலும் இருந்தது என்பதையும் இந்த மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சோலார் புயல் புவியை தாக்கியது. சூரியனில் இருந்து தீப்பிழம்புகள் உருவானது.
புவியைத் தாக்கியதும் ஆசிய மற்றும் ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான பகுதிகளில் ரேடியோ அலைவரிசைகளில் பாதிப்பு ஏற்பட்டது. மாலுமிகள், விமானிகள் ஆகியோருக்கும் இது பாதிப்பை தந்தது. பல பகுதிகளில் விஎச்பி ரேடியோ அலைவரிசைகள் நிறுத்தப்பட்டன.
உங்க Smart Phone சூடாவதை தடுக்கனுமா? – இந்த 5 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!
ரேடியோவை அலைவரிசையை முற்றிலும் இந்த சோலார் புயல் பாதிக்கச் செய்ததாக
விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் கண்டறிந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil