/tamil-ie/media/media_files/uploads/2022/10/NOBEL-PRIZE-MEDICINE1.jpg)
அழிந்துபோன மனித இனங்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வந்த பேபூ(Svante Pääbo) என்பவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசை தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பான பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது : மனித இனங்களின் ஒன்றான நியண்டர்தால் இனத்தின் மரபணுவை வைத்து முக்கிய ஆய்வை மேற்கொண்டுள்ளார் ஸ்வந்த பேபூ. தற்போது இருக்கும் மனித இனத்திற்கு ஒத்த இனத்தவர்கள் இவர்கள். மேலும் இவர் அறியவகை அழிந்த மனித இனமான ஹொமினின்ஸ் என்பதையும் கண்டறிந்திருக்கிறார்.
இவரது கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மனித இனத்தின் தோற்றத்தைப் பற்றியும் அதன் உடல் கூறுகளை பற்றியும் மேலும் உணர்ந்துகொள்ள இந்த கண்டுபிடிப்பு உதவுகிறது.
’ஏப்ஸ்’ (ape) என்ற குரங்கு இனத்தின் அழிவுற்ற இனமானதுதான் ஹொமினின்ஸ் . இவர்களுக்கும் தற்போதைய மனிதர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. ஸ்வந்த பேபூ ஆய்வின்படி, ஹொமினின்ஸ் இனத்தின் மரபணு மாற்றம் அடைந்து ஹோமோ செப்பியன்ஸாக மாறியிருக்கிறது. இவை 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவை விட்டு ஹோமோ செப்பியன்ஸ் இடம் பெயர்ந்தபோது நடந்திருக்கிறது.
இந்த பழமையான இனத்தின் மரபணுவுக்கும், தற்போதைய மனிதனின் மனநிலைக்கும் அதிக தொடர்பு இருப்பதாக இந்த கண்டுபிடிப்பு தெரிவிக்கிறது. உதாரணமாக நமது நோய் எதிர்ப்பு சக்தி எப்படி தொற்றுக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ளவும் இந்த கண்டுபிடிப்புகள் உதவும்.
இவரது கண்டுபிடிப்பு எளிமையாக நடந்துவிடவில்லை. டெனிசோவா குகைகளில் உள்ள ஹொமினின்ஸ் இனத்தின் எலும்பு மாதிரிகளில் உள்ள டிஎன்ஏ-வை எடுத்து சோதனை செய்துள்ளார். இந்நிலையில் இந்த மாதிரிகள் இதுவரை ஆய்வு செய்யப்பட்ட நியண்டர்தால் இனத்தின் மாதிரிகளை போல் அல்லாமல் வேறுபட்டு உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.