அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே உள்ள இறுக்கமான உறவுகளுக்கு மத்தியில், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பிப்ரவரி 26-ம் தேதி செல்ல உள்ளனர். க்ரூ-6 பயணத்தில் 2 அமெரிக்கர்கள், ஒரு அரேபியர் மற்றும் ஒரு ரஷ்ய விண்வெளி வீரர் செல்கின்றனர்.
Falcon-9 ராக்கெட் க்ரூ டிராகனுடன் பிப்.26-ம் தேதி புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள லாஞ்ச் காம்ப்ளக்ஸ் 39A தளத்திலிருந்து விண்வெளிக்கு அனுப்பபடுகிறது. அடுத்த நாள் விண்கலம் நிலையத்தின் ஹார்மனி தொகுதியுடன் இணைக்கப்படும்.
க்ரூ-6 திட்டம் வழக்கமான வீரர்கள் சழற்றி பணியாகும் என்று நாசா தெரிவித்துள்ளது. நான்கு க்ரூ-6 வீரர்கள் கமாண்டர் ஸ்டீபன் போவன், பைலட் வாரன் "வுடி" ஹோபர்க், மிஷன் ஸ்பெஷலிஸ்ட் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த (யுஏஇ) வீரர் சுல்தான் அல்னியாடி மற்றும் மிஷன் ஸ்பெஷலிஸ்ட் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் ஆண்ட்ரே ஃபெட்யாவ் ஆகியோர் பயணிக்கின்றனர்.
நான்கு விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்வதற்காக முன்னதாகவே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
Falcon-9 ராக்கெட் க்ரூ-6 திட்டத்தில் செல்லும் வீரர்களை அங்கு இறக்கி விட்டு முன்னதாக க்ரூ-5 திட்டத்தில் ஐ.எஸ்.எஸ்ஸிற்கு சென்ற 7 விண்வெளி வீரர்களை ஏற்றி வரும் என நாசா கூறியுள்ளது. வீரர்கள் சுழற்றியாக (The rotation mission) இது நடைபெறுகிறது. க்ரூ-6 விண்வெளி வீரர்கள் பூமியின் குறைந்த சுற்றுப்பாதை (low-Earth orbit) பகுதியில் அறிவியல் ஆய்வு மேற்கொள்வதற்காக அனுப்பபடுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/