/indian-express-tamil/media/media_files/2025/10/06/6-billion-tons-of-dust-per-second-2025-10-06-21-36-21.jpg)
வினாடிக்கு 600 கோடி டன் பொருட்களை விழுங்கி வளரும் கோள்... விஞ்ஞானிகளைத் திணறடிக்கும் நிகழ்வு!
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உலகளாவிய விண்வெளி ஆய்வாளர்கள், வளிமண்டலக் கோள்கள் குறித்த ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விஞ்ஞானிகள் ஒரு விண்வெளியில் தனித்துச் சுற்றும் கோள் (Rogue Planet) குறித்த ஆச்சரியமூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
விஞ்ஞானிகள் கடந்த 2008-ஆம் ஆண்டு கண்டுபிடித்த ‘SA 1107 - 7626’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோள், வழக்கத்திற்கு மாறாக எந்த ஒரு நட்சத்திரத்தையும் (சூரியன் போன்ற) சுற்றாமல் தனித்துச் சுற்றுகிறது. இந்த கோள் தூசு மற்றும் பிற பொருட்கள் மோதி உருவானது அல்ல என்பதையும் விஞ்ஞானிகள் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்தக் கோள் தனது சுற்றுவட்டப் பாதையில் உள்ள பொருட்களை அதிவேகமாக விழுங்கி வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் வேகம் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்தக் கோள் ஒவ்வொரு வினாடியும் சுமார் 600 கோடி டன் தூசு மற்றும் வாயுப் பொருட்களைத் தனக்குள் ஈர்த்து விழுங்கி வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தக் கோள் விழுங்கும் பொருட்களின் அளவு மற்றும் வேகம் இதற்கு முன் பார்த்ததில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கோள்கள் மட்டுமே பொருட்களைத் தனக்குள் ஈர்த்து வளர்ச்சி அடையும் என்று கருதப்பட்டது. ஆனால் விண்வெளியில் தனித்துச் சுற்றும் ஒரு கோள் இவ்வளவு தீவிரமாக வளர்வது இதுவே முதல் முறை என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நட்சத்திரங்கள் உருவாகும் போது நடப்பது போலவே, SA 1107 - 7626 கோளின் இந்தத் தீவிர வளர்ச்சிக்கு அதன் காந்தப்புலமே காரணமாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்லாகப் பார்க்கப்படுவதால், விஞ்ஞானிகள் இந்தக் கோளின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.