சிஎஸ்ஐஆர் (அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழு) தலைமை இயக்குநர் பதவிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமாக விளங்கும் சிஎஸ்ஐஆர் குழுவில் பெண் ஒருவர் தலைமை இயக்குநராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
லித்தியம் பேட்டரிகளின் திறனை மேம்படுத்தில் இவர் அதிகம் கனவம் கொண்டிருந்ததாக இவருடன் பணியாற்றிய டாக்டர் டி.பிரேம் குமார் கூறியுள்ளார். பிரேம் குமார் இவருடன் காரைக்குடியில் உள்ள மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இவருடன் பணியாற்றியவர். தற்போது அதிக திறன் கொண்ட பேட்டரிகளை உருவாக்குவதில் இந்தியா அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் சரியான நேரத்தில் நல்லதம்பி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.
இவர் சிஇசிஆர்ஐயில் 1997ம் ஆண்டு பணியாற்ற தொடங்கினார். 2019 ஆண்டு அதன் இயக்குநராக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு சிஇசிஆர்ஐயில் சேரும் வரை எலக்ட்ரோ கெமிஸ்டிரியில் அனுபவம் இல்லை. மேலும் இவர் தனியார் கல்லூரியில் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி பாடங்களை மாணவர்களுக்கு மூன்று வருடங்கள் கற்றுக்கொடுத்தார். மேலும் இவர் ஒரு ஆர்கானிக் கெமிஸ்ட். அண்ணாமலை பல்கலைகழத்தில் இவர் டாக்டர் பட்டம் பெற்றார்.
ஆனால் இவர் சிஇசிஆர்ஐயில் சேர்ந்த பிறகு எலக்ட்ரோ கெமிஸ்ட்ரியை வேகமாக கற்று தெரிந்துகொண்டதாக டாக்டர் பிரேம் குமார் கூறுகிறார். இவர் தனியாக பல ஆய்வுகளை செய்துள்ளார். மேலும் ராமன் கல்வி ஊக்கத்தொகை திட்டம் மூலம் டெக்சஸ் பல்கலைகழகத்தில் சேர்ந்து படித்தார். தற்போது இவரது மகளும் அங்கேதான் டாக்டர் படிப்பை படித்து வருகிறார்.
திருநெல்வேலியில் உள்ள விக்ரமசிங்கபுரத்தை சேர்ந்த, இவர் சிறுவயது முதல் ஆண் குழந்தையை போல் வளர்ந்துள்ளார். மேலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரியில்தான் படித்துள்ளார். இவர் நன்றாக பேசக்கூடியவர் என்றும் அறிவியல் மற்றும் பல விஷயங்களை பற்றி நெயர்த்தியாக பேசுவார் என்று இவருடன் பணியாற்றிய டாக்டர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார். இவர் வானொலிகளில் நடைபெறும் பேச்சு போட்டிகளில் கலந்துகொண்டு பேசுவார் என்றும் அவர் கூறினார்.
செயல்படுத்தப்படாத ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகளை பார்க்கும்போது கலைச்செல்வி கோபம் கொள்வார் என்றும் புதிய ஆய்வுகளை மேற்கொள்ள திறமை வாய்ந்த நபர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று முனைப்போடு இருப்பவர் என்றும் இவர் பற்றி கூறுகின்றனர்.