வியாழன் கிரகத்தின் ட்ரோஜன் சிறுகோள்களை ஆய்வு செய்வதற்காக விண்கலம் 6 பில்லியன் மைலுக்கும் அதிகமான பயணத்தை மேற்கொண்டு வருகிறது. லூசி திட்டத்திற்கு ஒரு புதிய இலக்கைச் சேர்ப்பதாக நாசா அறிவித்தது. அதன்படி லூசி திட்டத்தில் மேலும் ஒரு சிறுகோளை இலக்காக நாசா நிர்ணயித்துள்ளது.
(152830) 1999 VD57 என்று அழைக்கப்படும் சிறுகோள் மிகவும் சிறியதாக இருப்பதால் முந்தைய இலக்காக நிர்ணயம் செய்யவில்லை. சுமார் 700 மீட்டர் அளவில், 1999 VD57 என்ற சிறுகோள் இதுவரை பார்வையிட்டதில் மிகச்சிறிய முக்கிய பெல்ட் சிறுகோள் ஆகும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த சிறுகோள் DART பணி மற்றும் OSIRIS-REx மிஷன் பார்வையிட்ட முக்கிய பெல்ட் சிறுகோள்களுடன் நெருக்கமாக உள்ளது.
முக்கிய சிறுகோள் பெல்ட்டில் மில்லியன் கணக்கான சிறுகோள்கள் உள்ளன. 500,000 சிறுகோள்களை நன்கு வரையறுக்கப்பட்ட சுற்றுப்பாதைகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்டது. லூசி விண்கலம் தொலைவில் இருந்தும் ஏதேனும் ஒன்றை நன்றாகப் பார்க்கும் அளவுக்கு அருகில் பயணம் செய்கிறதா என்பதை பார்க்க வேண்டும். முதலில் வடிவமைக்கப்பட்ட லூசியின் பாதை, சிறுகோளின் 40,000 மைல்களுக்குள் பயணம் செய்தது. தற்போது அடுத்த இலக்காக குறைந்தது மூன்று மடங்கு அருகில் செல்லும் என்று திட்டத்தின் உறுப்பினர் ரபேல் மார்ஷால் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/