முதன்முறையாக செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளின் மொத்த கரிம கார்பனை அளவிட, நாசாவின் கியூரியாசிட்டி ரோவரில் இருந்து தரவை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர்.
உயிர் மூலக்கூறுகளில் ஆர்கானிக் கார்பன் ஒரு முக்கிய அங்கமாகும். அடர்த்தியான வளிமண்டலம், ஆறுகள் மற்றும் கடல்களில் பாய்ந்த திரவ நீர் என சிவப்பு கிரகத்தின் காலநிலை, பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியைப் போலவே இருந்தது என்பதற்கான சான்றுகள் உள்ளன.
இப்போது நாம் அறிந்தபடி திரவ நீர் வாழ்க்கைக்கு அவசியம் என்பதால், செவ்வாய் கிரகத்தில் எப்போதாவது வாழ்க்கை இருந்திருந்தால், கரிம கார்பன் போன்ற முக்கிய பொருட்களால் நீடித்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஆர்கானிக் கார்பன் என்பது ஹைட்ரஜன் அணுவுடன் பிணைக்கப்பட்ட கார்பன் ஆகும். இது கரிம மூலக்கூறுகளின் அடிப்படையாகும், அவை அனைத்து அறியப்பட்ட வாழ்க்கை வடிவங்களால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.
இருப்பினும், செவ்வாய் கிரகத்தில் ஆர்கானிக் கார்பன் இருப்பதால் அங்கு உயிர்கள் இருப்பதை நிரூபிக்க முடியாது. இவை விண்கற்கள் மற்றும் எரிமலைகள் போன்ற உயிரற்ற மூலங்களிலிருந்தும் வரலாம். இதற்கு முன்னரும் செவ்வாய் கிரகத்தில் ஆர்கானிக் கார்பன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் முந்தைய அளவீடுகள் குறிப்பிட்ட சேர்மங்கள் பற்றிய தகவல்களை மட்டுமே வழங்கியுள்ளன அல்லது பாறைகளில் உள்ள கார்பனின் ஒரு பகுதியை மட்டுமே கைப்பற்றியுள்ளன.
புதிய அளவீடு இந்த பாறைகளில் உள்ள கரிம கார்பனின் மொத்த அளவை அளிக்கிறது.
கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஒரு பழங்கால ஏரியான, கேல் பள்ளத்தின், யெல்லோநைஃப் விரிகுடாவில் 3.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான மண் பாறைகளை துளையிட்டு, மாதிரிகளை எடுத்தது. பள்ளத்தில் உள்ள மண்கல், ஏரியின் அடிப்பகுதியில் குடியேறிய நீரில் மிக நுண்ணிய வண்டலாக உருவாகி புதைக்கப்பட்டது.
கேல் பள்ளம் திரவ நீர் மற்றும் கரிம கார்பனைத் தவிர, இரசாயன ஆற்றல் மூலங்கள், குறைந்த அமிலத்தன்மை மற்றும் ஆக்ஸிஜன், நைட்ரஜன், கந்தகம் போன்ற உயிரியலுக்குத் தேவையான பிற கூறுகள் போன்ற பிற நிலைமைகளைக் கொண்டிருந்தது.
ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கும் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அந்த இடம் "எப்போதாவது இருந்திருந்தால், அங்கு வாழக்கூடிய சூழலை வழங்கியிருக்கும்."
அளவீடு செய்வதற்காக, கியூரியாசிட்டி’ மாதிரியை செவ்வாய் கிரகத்தில் (Sample Analysis at Mars -SAM) மாதிரி பகுப்பாய்வு கருவிக்கு வழங்கியது, அங்கு ஒரு அடுப்பு’ பாறைத்தூளை படிப்படியாக அதிக வெப்பநிலைக்கு சூடாக்கியது.
இது கரிம கார்பனை கார்பன் டை ஆக்சைடாக மாற்ற ஆக்ஸிஜனையும் வெப்பத்தையும் பயன்படுத்தியது. பின்னர், பாறையில் உள்ள கரிம கார்பனின் அளவைப் பெற கார்பன் டை ஆக்சைட்டின் அளவு அளவிடப்பட்டது. சோதனை 2014 இல் செய்யப்பட்டது, ஆனால் தரவுகளைப் புரிந்துகொள்வதற்கும், கேல் க்ரேட்டரில், மிஷனின் பிற கண்டுபிடிப்புகளின் பின்னணியில் முடிவுகளை வைப்பதற்கும் பல வருட பகுப்பாய்வு தேவைப்பட்டது.
இது ஒரு ரிசொர்ஸ்-இண்டென்சிவ் பரிசோதனை என்பதால், செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டியின் 10 ஆண்டுகளில் இது ஒருமுறை மட்டுமே நிகழ்த்தப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“