2 சூரியன்கள், கடல்கள் கொண்ட பூமி போன்ற கிரகம் கண்டுபிடிப்பு: நாசா கூறுவது என்ன?

பூமியைப் போன்ற கிரகம் ஒன்றை நாசா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியை விட பெரியதாகவும், 2 சூரியன்கள், ஆழமான கடல்கள் கொண்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பூமியைப் போன்ற கிரகம் ஒன்றை நாசா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியை விட பெரியதாகவும், 2 சூரியன்கள், ஆழமான கடல்கள் கொண்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

author-image
WebDesk
New Update
2 சூரியன்கள், கடல்கள் கொண்ட பூமி போன்ற கிரகம் கண்டுபிடிப்பு:  நாசா கூறுவது என்ன?

அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா விண்ணில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, பன்னாட்டு விஞ்ஞானிகள் குழு பூமியைப் போன்ற கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். 2 சூரியன்கள், ஆழமான கடல்கள் கொண்ட புதிய கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். சூரிய குடும்பத்திற்கு வெளியே இந்த கிரகம் இருப்பதாக கூறுகின்றனர். பூமியை விட 70 சதவீதம் பெரியது. இந்த கிரகத்திற்கு TOI-1452b என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கோள் பூமியை விட கிட்டத்தட்ட 100 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த கிரகத்தில் வெப்பநிலை துல்லியமாகவும், நீர் திரவ வடிவில் இருப்பதாவும் கூறுகின்றனர்.

TOI-1452b என்றால் என்ன?

Advertisment

Superearth TOI-1452b நாசாவின் TESS விண்வெளி தொலைநோக்கி மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு சூரியன்களை கொண்டுள்ள இந்த எக்ஸோப்ளானெட் 10% முதல் 25% வரை நீர் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது. நாசாவின் கூற்றுப்படி, இந்த விகிதம் சூரிய குடும்பத்தில் உள்ள நீர் நிலவுகளுக்கு சமமானதாக கருதப்படுகிறது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் நான்கு மடங்கு சிறிய நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இந்த கிரகத்தில் என்பது 11 நாட்கள் மட்டுமே. ஏனெனில் அது அதன் நட்சத்திரத்தை மிக வேகமாக சுற்றி வருகிறது.

இந்த கிரகத்தின் சுற்றுப்பாதை சிறியது மற்றும் குளிர்ச்சியானது. கிரகத்தில் பெறப்படுகிறது வெளிச்சம் வாழ்வதற்கு உகந்தது மற்றும் போதுமானதாக உள்ளது என ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் வாழ்வதற்கு ஏற்றதா?

Advertisment
Advertisements

கிரகத்தின் அளவைக் குறிப்பிட்டு கூறுகையில், ஆழமான கடல் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மாண்ட்ரீல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கிரகத்தின் மொத்த எடையில் 30 சதவிகிதம் கடல் உள்ளதாக கூறுகின்றனர். பூமியின் 70 சதவிகித நீர் பகுதிகள் மொத்த எடை 1 சதவிகிதம் மட்டுமே என்றும் கூறியுள்ளனர்.

இருப்பினும், நீரின் இருப்பை உறுதிசெய்ய மேலும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர். மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தின் வானியல் இயற்பியலாளர் ரெனே டோயன் கூறுகையில், சில கோட்பாடுகள் கடலுக்கு அடியில், நீர் வெப்ப துவாரங்களுக்கு அருகில் உயிர்கள் தோன்றியதாகக் கூறுகின்றன. கிரகத்தில் இருக்கும் நீர்கள் எவ்வளவு காலத்திற்கு இருக்கும். உயிர்கள் வாழ தேவையான நீர் இருப்பு உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். கிரகத்தில் பெரிய பாறைகள் இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

புதிய கிரகத்தில் ஏராளமான உயிர்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றன. ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் TOI -1452b கிரகத்தில் நீர் இருப்பை உறுதிப்படுத்த உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nasa Science

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: