/tamil-ie/media/media_files/uploads/2022/10/New-Project22.jpg)
இந்தப் புறக்கோளுக்கு TOI-1075b என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வானத்தை நோக்கிய நம் கண்களின் தேடல், பரந்த விண்வெளியில் எதையாவது கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொள்கிறது.
இதனால், ஒவ்வொரு நாளும் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அறிவாற்றலுடன், நாம் வானத்தை பற்றிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறோம்.
இந்த நிலையில், விஞ்ஞானிகள் தற்போது 'சூப்பர் எர்த்' ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இது பூமியை விட கிட்டத்தட்ட 10 மடங்கு பெரிய புறக்கோள் ஆகும்.
இந்தப் பிரம்மாண்டமான புறக்கோள் பூமியில் இருந்து 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. நாசாவின் டிரான்சிட்டிங் எக்ஸோபிளானட் சர்வே சேட்டிலைட் (Transiting Exoplanet Survey Satellite (TESS)) இதனை கண்டுபிடித்துள்ளது.
இந்தப் புறக்கோளுக்கு TOI-1075b என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஆரம் பூமியை விட 1.8 மடங்கு அதிகம், மேலும் இதில் பாறைகள், வாயு அல்ல என்று நம்பப்படுகிறது.
கிரகம் பாறையாக இருந்தாலும், அதன் நட்சத்திரத்திற்கு மிக அருகில் இருப்பதால், அதன் மேற்பரப்பு உருகிய எரிமலையால் மூடப்பட்டிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து விஞ்ஞானிகள் தெரிவிக்கையில், "TOI-1075b சூப்பர்-எர்த்ஸில், பொதுவாக ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்தின் அடர்த்தியான வளிமண்டலத்தை எதிர்பார்க்கலாம்.
ஆனால் இந்த கிரகத்தின் அடர்த்தியான கலவை மற்றும் எரியும் இறுக்கமான சுற்றுப்பாதை ஆகியவை அத்தகைய வளிமண்டலத்தை சாத்தியமற்றதாக ஆக்குகின்றன” என்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.