அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் கூற்றுப்படி, அக்டோபர் 9, ஞாயிற்றுக்கிழமை நமது கிரகத்தின் மீது வழக்கத்திற்கு மாறாக பிரகாசமான மற்றும் நீடித்த கதிர்வீச்சு துடிப்பு பரவியது. இந்த காஸ்மிக் வெடிப்பு காமா-கதிர்களை வெளிப்படுத்தியது. பிரபஞ்சத்தின் மிகவும் சக்திவாய்ந்த வெடிப்புகளில் ஒன்றாகும் எனக் கூறியது.
புதிய கருந்துளையின் அண்ட வெடிப்பில் இருந்து வெளிவந்த எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள்
நமது சூரிய மண்டலத்தின் வழியாக செல்லும்போது, அது நாசாவின் ஃபெர்மி காமா-கதிர் விண்வெளி தொலைநோக்கி, நெய்ல் கெஹ்ரெல்ஸ் ஸ்விஃப்ட் அப்சர்வேட்டரி மற்றும் பிற ஆய்வகங்களை இது தூண்டியது.
சகிதா விண்மீன் மண்டலத்தின் திசையிலிருந்து இந்த சமிக்ஞை உருவானது. வெடிப்புகள் நமது கிரகத்தை அடைய சுமார் 1.9 பில்லியன் ஆண்டுகள் பயணித்தது. நட்சத்திரத்தின் ஒரு பகுதி வீழ்ந்து சரிந்து கருந்துளைகளை உருவாக்குவதால் ஏற்பட்டது என வானியலாளர்கள் கூறுகின்றனர். இந்த நிகழ்வின்போது வளரும் கருந்துளையானது துகள்களின் சக்திவாய்ந்த நீரோடைகளை ஈர்த்து ஒளியின் வேகத்தில் பயணித்தது. இந்த கருந்துளை நட்சத்திரத்தை துளைக்கும்போது, அது எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்களை வெளியிடுகிறது.
இந்த ஆண்டு ஏப்ரலில், நாசாவின் NICER X-ray தொலைநோக்கி மற்றும் ஜப்பான் டிடெக்டர் Monitor of All-sky X-ray Image (MAXI) இரண்டும் இணைக்கப்பட்டு OHMAN (OHMAN (Orbiting High-energy Monitor Alert Network) உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த இணைப்பு கருந்துளை வெடிப்பை கண்காணிக்க உதவியது எனக் ஆராய்ச்சியாளர்கள் கூறினர். மேலும், இதுபோன்ற காமா-கதிர் வெடிப்பு, (ஜிஆர்பி) இன்னும் பல ஆண்டுகளுக்கு நிகழாது என நாசா கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“