Advertisment

ஆர்ட்டெமிஸ் III: ஸ்பேஸ்சூட் தயாரிக்க ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

ஆர்ட்டெமிஸ் III திட்டத்திற்கு விண்வெளி வீரர்களுக்கு ஸ்பேஸ்சூட் தயாரிக்கும் ஒப்பந்ததை நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்திடம் மேற்கொண்டுள்ளது.

author-image
WebDesk
New Update
ஆர்ட்டெமிஸ் III: ஸ்பேஸ்சூட்  தயாரிக்க ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் கிட்டதிட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான பல கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisment

அந்தவகையில் அண்மையில் ஆர்ட்டெமிஸ் I மூலம் சோதனை முயற்சியாக விண்வெளி ஏவுகணை அமைப்பு (SLS) ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது. ஆளில்லா விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டிருந்தது. ஆனால் என்ஜின் கோளாறு, எரிபொருள் கசிவு காரணமாக 2 முறை சோதனை முயற்சி நிறுத்தப்பட்டது. இருப்பினும் இது மற்ற ஆர்ட்டெமிஸ் திட்ட பணிகளை பாதிக்காது என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருந்தனர்.

அந்தவகையில் தற்போது, ஆர்ட்டெமிஸ் III திட்டத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்களுக்கான ஸ்பேஸ்சூட் தயாரிக்கும் ஒப்பந்ததை நாசா ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்திடம் மேற்கொண்டுள்ளது. 228.5 மில்லியன் டாலர் அடிப்படை பணிகளுக்கான ஒப்பந்தம் மேற் கொண்டுள்ளது.

ஸ்பேஸ்சூட் மற்றும் துணை அமைப்புகளை உருவாக்கி, நிலவில் அவற்றின் பயன்பாடு குறித்து விளக்கும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹூஸ்டனை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஆக்ஸியம் ஸ்பேஸ், ஸ்பேஸ்சூட் மற்றும் உதவு உபகரணங்கள் வடிவமைப்பு, மேம்பாடு, தரம், சான்றிதழ் மற்றும் தயாரிப்பு செய்ய உள்ளது.

விண்வெளி வீரர்களின் சோதனை, பணி திட்டமிடல் மற்றும் சேவை அமைப்புகளின் ஒப்புதல் ஆகியவை நாசா நிபுணர்களால் நடத்தப்படும். ஆக்ஸியம் நிறுவனம் விண்வெளி போன்ற சூழலில் தனது ஆடைகளை பரிசோதித்து காட்ட வேண்டும். The space agency’s Extravehicular Activity and Human Surface Mobility Program (EHP) ஸ்பேஸ்சூட் ஒப்பந்தத்தை நிர்வகிக்கும். இந்த அமைப்பு பூமியின் குறைந்த அளவு சுற்றுப்பாதை மற்றும் நிலவில் செல்லும் திறன்களை மேம்படுத்த உதவுகிறது.

நாசாவின் இஹெச்பி மேலாளர் லாரா கியர்னி கூறுகையில், இந்த வரலாற்றுப் பணியில் ஆக்ஸியம்யுடன் இணைந்து செயல்படுவதில் நாசா பெருமிதம் கொள்கிறது. ஆர்ட்டெமிஸ் III பணிகள் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். செவ்வாய் கிரகத்திற்கான பயணங்களுக்கு வழி வகுக்கும். விண்வெளி உடைகள் (ஸ்பேஸ்சூட்) மிகவும் முக்கியமானது. இது உண்மையில் நாசாவின் பணிகளை அடுத்த கட்டத்தை எடுத்து செல்ல உதவுகிறது என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment