Advertisment

விண்வெளியில் இருந்து முதல்முறையாக உலகளாவிய நீர் ஆய்வு நடத்த நாசா திட்டம்

உலகின் பெருங்கடல்கள், ஏரிகள் மற்றும் ஆறுகள் பற்றி விண்வெளியில் விரிவான ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
விண்வெளியில் இருந்து முதல்முறையாக உலகளாவிய நீர் ஆய்வு நடத்த நாசா திட்டம்

உலகின் பெருங்கடல்கள், ஏரிகள் மற்றும் ஆறுகள் பற்றிய விரிவான ஆய்வு மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது. விண்வெளியில் முதல்முறையாக உலகளாவிய நீர் ஆய்வு நடத்தப்பட உள்ளது. இதை நடத்துவதற்கான ஒரு பெரிய புவி அறிவியல் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. தெற்கு கலிபோர்னியாவில் நாசா சர்வதேச செயற்கைக்கோள் இயக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

SWOT என அழைக்கப்படும் (Surface Water and Ocean Topography) திட்டத்திற்கான பணிகளை குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இத்திட்டம் இயக்கவியல் மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளில் புதிய வெளிச்சத்தை வழங்கும். எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட், லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வடமேற்கே 170 மைல் (275 கிமீ) தொலைவில் உள்ள வாண்டன்பெர்க் அமெரிக்க விண்வெளிப் படைத் தளத்திலிருந்து SWOT விண்கலத்தை சுற்றுப்பாதையில் கொண்டு செல்லத் தயாராக இருந்தது.

அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், SUV அளவிலான செயற்கைக்கோள் இன்னும் சில மாதங்களுக்குள் ஆராய்ச்சித் தரவை வழங்கத் தொடங்கும். SWOT ஆனது மேம்பட்ட மைக்ரோவேவ் ரேடார் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது. இது உலகின் 90% க்கும் அதிகமான கடல்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளின் உயரம்-மேற்பரப்பு அளவீடுகளை உயர்தர வரைபட விவரங்களை சேகரிக்கும் என்று
விஞ்ஞானிகள் கூறினர்.

இந்த டேரார் 21 நாட்களுக்கு 2 முறை தரவுகளை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரேடார் ஸ்வீப்களிலிருந்து தொகுக்கப்பட்ட தரவு, கடல்-சுழற்சி மாதிரிகளை மேம்படுத்தும்.வானிலை மற்றும் காலநிலை முன்னறிவிப்புகளை மேம்படுத்தும் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரிதான நன்னீர் விநியோகத்தை நிர்வகிக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அருகிலுள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் (ஜேபிஎல்) செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது.
பிரான்ஸ் மற்றும் கனடாவில் உள்ள அதன் சக நிறுவனங்களுடன் இணைந்து அமெரிக்க விண்வெளி நிறுவனத்தால் இந்த செயற்க்கைகோள் உருவாக்கப்பட்டது. வரும்10 ஆண்டுகளில் நாசா மேற்கொள்ள வேண்டிய திட்டங்களாக தேசிய ஆராய்ச்சி கவுன்சிலில் பட்டியலிடப்பட்ட 15 பணிகளில் SWOT திட்டமும் ஒன்றாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment