விண்வெளி வீரர்கள் மூலம் ஹப்பிள் தொலைநோக்கி கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் சர்வீஸ் செய்யப்பட்டது. அதன்பிறகு பல ஆண்டுகளாக நாசா கணினி மூலம் குறைபாடுகள் மற்றும் பழுதை சரிசெய்து வந்தது. தற்போது இதை நேரடியாக செய்ய நாசா திட்டமிடுகிறது.
ஹப்பிள் தொலைநோக்கி தற்போது பூமியிலிருந்து 540 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி வருகிறது. டிராகன் விண்கலம் பூமியிலிருந்து 500 கிலோமீட்டர்களுக்கு மேல் சுற்றி வருகிறது. நாசா தற்போது ஹப்பிள் தொலைநோக்கியின் சுற்றுப்பாதையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதுவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தை பயன்படுத்தி உயர்த்த திட்டமிட்டுவருகிறது. இதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மற்றும் போலரிஸ் திட்டத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா தற்போது சேவை பணிகளுடன் தொடர்புடைய தொழில்நுட்ப சவால்களை ஆய்வு செய்து வருகின்றன. பிற நிறுவனங்களும் தங்களது கருத்துகளை கூற நாசா அனுமதியளிக்கிறது. நாசா 6 மாதங்கள் இந்த ஆய்வை மேற்கொள்கிறது.
நாசா ஆய்வின் போது ஹப்பிள் மற்றும் டிராகன் விண்கலம் என இரண்டிலிருந்தும் தொழில்நுட்ப தகவல்களை சேகரித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தொலைநோக்கியின் சுற்றுப்பாதையை மிகவும் பாதுகாப்பான முறையில் மாற்றுவதற்கான வழிகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வர். தொலைநோக்கியின் சுற்றுப்பாதையை உயர்த்துவதில் வெற்றி கண்டால், பூமிக்கு அருகில் சுற்றிவரும் மற்ற விண்கலன்களுக்கும் இந்த பணியை விரிவுபடுத்த நாசா அடுத்தக்கட்ட நோக்கமாக கொண்டுள்ளது.
ஹப்பிள் தொலைநோக்கி பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் 31 ஆண்டுகளுக்கு மேல் 1 பில்லியன் வினாடிகளை விண்ணில் கடந்துள்ளது. இந்தப் பயணத்தில் பல முறை தொலைநோக்கியின் பழுதுகள் சரிபார்க்கப்பட்டுள்ளன.
ஹப்பிள் தொலைநோக்கியை 31 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பியது. நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே பூமியிலிருந்து நூற்றுக்கணக்கான ஒளி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கிரகங்களை கண்டுபிடிப்பதற்கான பணிகளை செய்து வருகிறது. ஹப்பிள் தற்போது TESS, Transiting Exoplanet Survey Satellite போன்ற மற்ற விண்வெளி தொலைநோக்கிகளுடன் இணைந்து செயல்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil