scorecardresearch

அடி தூள்.. ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் பெயரை அறிவிக்கும் நாசா; இதன் பணி என்ன?

ஆர்ட்டெமிஸ் II நிலவு திட்டத்தில் பயணிக்கும் 4 விண்வெளி வீரர்களின் பெயர்களை நாசா மற்றும் கனேடியன் விண்வெளி நிலையம் ஏப்ரல் 3-ம் தேதி அறிவிக்க உள்ளது.

NASA’s Artemis II
NASA’s Artemis II

ஆர்ட்டெமிஸ் 1 திட்டம் வெற்றியைத் தொடர்ந்து நாசா அதன் நிலவு திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் பல கட்ட பிரச்சனைகளுக்கு பிறகு ஆர்ட்டெமிஸ் I ஆளில்லா விண்கலத்தை நாசா வெற்றிகரமாக ஏவியது. இந்நிலையில் அடுத்த முயற்சியாக ஆர்ட்டெமிஸ் II திட்டத்திற்கு நாசா தயாராகி வருகிறது. ஆர்ட்டெமிஸ் II திட்டத்தில் விண்வெளி வீரர்கள் நிலவு சுற்றுப் பாதைக்கு சென்று திரும்புவர்.

இதற்காக 4 பேர் கொண்ட விண்வெளி வீரர்கள் குழுவை நாசா மற்றும் கனேடியன் விண்வெளி நிலையம் ஏப்ரல் 3-ம் தேதி அறிவிக்க உள்ளது. இந்த திட்டத்தில் 3 நாசா விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு கனடா விண்வெளி ஏஜென்சி (CSA) வீரர் இடம் பெற உள்ளனர். இந்த வீரர்களின் பெயர்கள் ஏப்ரல் 3-ம் தேதி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நாசா மற்றும் கனேடியன் விண்வெளி நிலையம் கூட்டாக அறிவிக்க உள்ளது.

ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதன் சோதனை முயற்சியாக ஆர்ட்டெமிஸ் II திட்டம் அமைய உள்ளது. ஆர்ட்டெமிஸ் II திட்டம் ஆர்ட்டெமிஸ் மிஷனின் முதல் crewed mission ஆகும். இந்த திட்டத்தில் விண்வெளி வீரர்கள் நிலவைத் சுற்றி வந்து மீண்டும் பூமிக்கு திரும்புவர். ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் நிலவில் வீரர்கள் இறங்கி நீண்ட காலம் தங்கி ஆய்வு மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தில் எஸ்.எல்.எஸ், விண்வெளி ஏவுதல் ராக்கெட் மூலம் ஆளில்லா ஓரியன் விண்கலம் அனுப்பபட்டது. ஆர்ட்டெமிஸ் II திட்டத்தில் இவைகள் சோதனை செய்யப்படுகின்றன. மனிதர்களுக்கு இந்த கருவிகள் எவ்வளவு தூரம் பாதுகாப்பாக உள்ளது என்பதை சோதனை செய்ய உள்ளனர்.

ஆர்ட்டெமிஸ் II 10 நாட்கள் பயணத் திட்டத்தில் 4 விண்வெளி வீரர்கள் நிலவைத் சுற்றி பறந்து, ஓரியன் பாதுகாப்பு தரம் குறித்து ஆய்வு செய்து, மனிதர்கள் நிலவில் நீண்ட நாள் தங்கி ஆய்வு செய்வதற்கு ஏற்ற வகையில் உள்ளதாக என்பதையும் சோதனை செய்ய உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: Nasas artemis ii astronauts to be announced on monday