நாசாவின் ஓரியன் விண்கலம் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பபட்டு, அங்கிருந்து நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் பணியில் நாசா ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆர்ட்டெமிஸ் 1 மூலம் எஸ்.எல்.எஸ் ராக்கெட் மூலம் ஓரியன் விண்கலத்தை 2 முயற்சிகளுக்கு பின் 3-வது முயற்சியில் நாசா வெற்றிகரமாக ஏவியது.
25 நாட்கள் அங்கு பயணித்து ஆய்வு செய்து மீண்டும் ஓரியன் விண்கலம் பூமிக்கு திரும்பும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் 25 நாள் பயணத்தின் ஏழாவது நாளில் நேற்று முன்தினம் ஓரியன் விண்கலம் பூமியை படம் பிடித்து அனுப்பியது. விண்கலம் சந்திரனுக்கு நெருங்கி சென்று போது, ஓரியன் விண்கலத்தின் வாயேஜர் ஆய்வு மூலம் வெளியேறிய கதிர்களில் பூமியை நீல நிறத்தில் படம் பிடித்து அனுப்பியுள்ளது.
ஓரியன் விண்கலம் இதற்கு முந்தைய ஆய்வின் போதும், பூமியின் இதேபோன்ற படத்தை எடுத்து அனுப்பியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறினர். ஓரியன் கேமராவால் படம்பிடிக்கப்பட்ட படம், பில்லியன் கணக்கான கிலோமீட்டர் தூரத்தில், விண்வெளியின் இருளில் தொங்கும் ஒரு சிறிய நீல பளிங்கு போன்று இருக்கும் பூமியைப் படம் பிடித்துள்ளது. இந்தப் படம் ஓரியன் விண்கலம் நிலவில் சுற்றிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது.
ஓரியனில் உள்ள ஆப்டிகல் நேவிகேஷன் கேமரா பூமியை படம் பிடித்து அனுப்பியுள்ளது. மேலும் ஓரியன் விண்கலம் அதன் பயணத்தின் 2-வது நாளில் பூமி கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருப்பது போல் படம் பிடித்து அனுப்பியது.
ஓரியன் வரும் நாட்களில் நிலவு மண்டலம் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசை பகுதியிலிருந்து வெளியேறி தொலைதூரசுற்றுப்பாதையில் தொடர்ந்து பயணிக்கும் என நாசா கூறியுள்ளது.