நாசாவின் கேப்ஸ்டோன் செயற்கைகோள் நேற்று (நவம்பர் 13) வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. இது எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு உதவியாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோவேவ் ஓவன் அளவிலான இந்த செயற்கைக்கோள் வெறும் 25 கிலோகிராம் எடை கொண்டது. இது நிலவில் ஆய்வு செய்யப்படும் முதல் கியூப்சாட் ஆகும்.
செப்டம்பர் 8 அன்று ஒரு பாதை திருத்தும் சூழ்ச்சி கவனக்குறைவாக கேப்ஸ்டோன் விண்கலத்தை மிக வேகமாக சுழலச் செய்தது, இதனால் உள் எதிர்வினை சக்கரத்தால் சுழலைக் கட்டுப்படுத்தவோ அல்லது எதிர்கொள்ளவோ முடியவில்லை. பின்னர், அக்டோபர் 7 ஆம் தேதி நாசா குழுக்கள் இதை கட்டுப்படுத்தி விண்கலத்தை செயல்படுத்தியது.
CAPSTONE திட்டம்
CAPSTONE என்பது Cislunar Autonomous Positioning System Technology Operations and Navigation Experiment என்பதன் சுருக்கம். கியூப்சாட் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
Near rectilinear halo orbit (NRHO) என்று அழைக்கப்படும் ஒரு தனித்துவமான நிலவு சுற்றுப்பாதையை சோதிக்க அனுப்பபட்டுள்ளது. இது மிகவும் நீளமானது. பூமி மற்றும் சந்திரனின் ஈர்ப்புக்கு இடையில் ஒரு துல்லியமான சமநிலை புள்ளியில் அமைந்துள்ளது.
கடந்த 4 மாதங்களாக, கேப்ஸ்டோன் விண்கலம் நிலவுக்குச் செல்ல முடியாத நிலையில் இருந்தது. ஆழமான விண்வெளிப் பாதையில் பயணித்து வந்தது. இந்த பாதை ஒரு பாலிஸ்டிக் லூனார் டிரான்ஸ்ஃபர் என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது விண்வெளியில் ஈர்ப்பு விசையைப் பின்பற்றி விண்கலம் அதன் இலக்கை அடைய உதவுகிறது, அதே நேரத்தில் மிகக் குறைந்த ஆற்றலைச் செலவழிக்கிறது.
கேப்ஸ்டோன் விண்கலம் மணிக்கு 6,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது.
NRHO மற்றும் CAPS
NRHO சுற்றுப்பாதை பூமி மற்றும் நிலவின் ஈர்ப்பு விசைகளுக்கு இடையே ஒரு துல்லியமான சமநிலை புள்ளியில் இருப்பதால், அதை பராமரிக்க குறைந்தபட்ச ஆற்றல் தேவைப்படுகிறது. அதாவது நிலவுக்கும் அதற்கு மேல் செல்லும் பயணங்களுக்கும் ஒரு சிறந்த நிலைப் பகுதியாக இது இருக்கும். இந்த சுற்றுப்பாதையைச் சரிபார்ப்பதன் மூலம், கேப்ஸ்டோன் எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் கேட்வே விண்வெளி நிலையம் போன்ற நீண்ட கால பயணங்களை நிறுவவும் உதவும் என்று நாசா தெரிவித்துள்ளது.
மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் ஆர்ட்டெமிஸ் திட்டத்திற்கு உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil