scorecardresearch

நாசாவின் ஜூனோ எரிமலைகள் அதிகம் உள்ள இடத்தில் ஆய்வு.. எங்கு தெரியுமா?

நாசாவின் ஜூனோ விண்கலம் சூரியக் குடும்பத்தில் எரிமலைகள் அதிகம் உள்ள இடமாக கருதப்படும் வியாழன் கோளின் மூன் ஐயோ என்ற இடத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

நாசாவின் ஜூனோ எரிமலைகள் அதிகம் உள்ள இடத்தில் ஆய்வு.. எங்கு தெரியுமா?

நாசாவின் ஜூனோ விண்கலம் ( NASA’s Juno spacecraft) வியாழன் கோளை (Jupiter) ஆய்வு செய்து வருகிறது. இரண்டு ஆண்டுகளாக பயணம் செய்து வருகிறது. வியாழனின் நிலவுகளில் ஆய்வு செய்து வருகிறது. ஜோவியன் மூன் கேனிமீட் மற்றும் யூரோபா பற்றி ஏராளமான தரவுகளை அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் ஜோவியன் மூன் ஐயோவின் (Jovian moon Io) படங்களை எடுக்க தயாராக உள்ளது.

நாசாவின் கூற்றுப்படி, வியாழனின் மூன் ஐயோவில் சூரியக் குடும்பத்திலேயே மிகவும் அதிக எரிமலைகள் உள்ள இடமாகும். ஜூனோ விண்கலம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் இங்கு ஆய்வு செய்ய உள்ளது.

Io: வியாழனின் எரிமலை நிலவு (Jupiter’s volcanic moon)

Io நிலவு பூமியின் நிலவை விட சற்று பெரியது மற்றும் நமது கிரகத்தின் கால்பகுதி விட்டம் கொண்டது. Io நிலவின் ஒரு பக்கம் எப்போதும் வியாழனை கிரகத்தை எதிர்கொள்கிறது. நிலவு ஒரு முறை வியாழனை சுற்றி வர 1.8 பூமி நாட்கள் ஆகிறது.

இது மிக மெல்லிய வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது. இது முதன்மையாக சல்பர் டை ஆக்சைடால் ஆனது. ஆனால் ஜோவியன் நிலவுகளின் மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று அதன் எரிமலைகள் ஆகும். சில எரிமலை வெடிக்கும் நீரூற்றுகள் டஜன் கணக்கான கிலோமீட்டர் உயரத்தில் உள்ளன. அதன் மேற்பரப்பில் உருகிய சிலிக்கான் எரிமலை ஏரிகள் கூட உள்ளன.

2001: A Space Odyssey திரைப்படத்தில் வியாழனின் எரிமலை நிலவு முக்கியமானதாக இருந்தது. அங்கு விண்வெளி வீரர்கள் கைவிடப்பட்ட விண்கலத்தில் ஏறுவதற்காக அதன் எரிமலைகளுக்கு மேலே ஆபத்தான விண்வெளி நடைப்பயணத்தை மேற்கொள்வர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: Nasas juno to explore most volcanic place in the solar system

Best of Express