நாசா ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தின் மூலம் ஆளில்லா ஓரியன் விண்கலம் அனுப்பபட்டது. 25 நாட்கள் திட்டத்தில் நிலவில் பணிகளை முடித்து விண்கலம் டிசம்பர் 11-ம் தேதி பசிபிக் கடலில் விழுகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓரியன் விண்கலம் நேற்று திங்கட்கிழமை சந்திர மேற்பரப்பில் இருந்து 80 மைல்கள் (130 கி.மீ) தொலைவில் பயணித்து நிலவுக்கு மிக அருகில் சென்றதாக நாசா தெரிவித்தது. விண்கல
வாகனத்தின் வேகத்தை மாற்றி பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட "பவர்டு ஃப்ளைபை பர்ன்" செயலுக்காக இது செலுத்தப்பட்டது.
3-1/2-நிமிட கணக்கில் டிசம்பர் 11-ம் தேதி பசிபிக் பெருங்கடலில் பாராசூட் மூலம் விண்கலம் தரையிறக்கப்படும் என நாசா கூறியது. ஓரியன் விண்கலத்தில் வீரர்கள் இல்லை என்றாலும், 3 டம்மி பொம்மைகள் அனுப்பபட்டுள்ளன. பயணத்தின் 13-வது நாளில் விண்கலம் கடந்த கால நிலவு பயணங்களை முறியடித்து அதிக தூரம் பயணித்தது. பூமியில் இருந்து 268,563 மைல் தொலைவில், 1970-இல் அப்பல்லோ குழுவினர் பயணித்த சாதனை தூரத்தை விட கிட்டத்தட்ட 20,000 மைல்களுக்கு அப்பால் ஓரியன் சென்றது.
ஓரியன் விண்கலம் தரையிறங்குவதை உலக நாடுகள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த பணி வெற்றியடைந்தால், 2024-ம் ஆண்டில் ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்தின் மூலம் வீரர்களை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஆர்ட்டெமிஸ் 3 திட்டத்தில் விண்வெளி வீரர்கள் முதல் முறையாக நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.
ஓரியன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பும் வேகத்தை விட மணிக்கு 24,500 மைல் வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் போது அதன் வெப்பக் கவசத்தின் நீடித்த தன்மையை சோதிப்பதே ஓரியன் விண்கலத்தின் முக்கிய நோக்கமாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/