அமெரிக்காவின் நாசாவிற்கு சொந்தமான பெர்சிவியரன்ஸ் ரோவர் (Perseverance Mars Rover) செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ரோவர் ஆய்வுக்கான 4-வது மாதிரியை மார்டியன் பகுதியில் தரையிறக்கியது. மொத்தம் 10 டியூப் மாதிரிகளை செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மார்டியன் பகுதியில் தரையிறக்க உள்ளது. செவ்வாய் கிரகத்தின் மாதிரி திட்ட பணிகளின் கீழ் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெர்சிவியரன்ஸ் ரோவர் மொத்தம் 43 ஆறு அடி நீள டைட்டானியம் மாதிரி கன்டெய்னர்களை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டு சென்றது. இவற்றில், 38 செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து சேகரிக்கப்பட்ட பல்வேறு வகையான மாதிரிகளால் நிரப்பப்படும். அதே சமயம் 5 மாதிரிகள் காலியாக வைக்கப்படும். கன்டெய்னர்களின் தூய்மையை கண்டறிய அது காலியாக வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாசாவின் செவ்வாய் கிரக திட்டம்
பெர்சிவியரன்ஸ் ரோவர் இதுவரை செவ்வாய் கிரகத்தின் பாறை மற்றும் ரெகோலித்தின் 18 மாதிரிகளை சேகரித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் ரோவர் மாதிரிகளை எதிர்கால ரோபோ லேண்டருக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாசா சிறிய ரக ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்தின் மார்டியன் பகுதிக்கு விண்கலத்தை அனுப்ப உள்ளது. இது கிரகத்தில் மேலும் சில ஆய்வுகளை மேற்கொள்ளும்.
பெர்சிவரன்ஸ் ரோவரால் லேண்டருக்கு மாதிரிகளை வழங்க முடியாவிட்டால், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டுள்ள 10 மாதிரிகளின் தகவல்கள் பேக்கப் எடுத்து சேமித்து வைக்கப்படும். நாசா மீட்பு மாதிரி ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி தரையில் இருந்தவாறு மாதிரிகள் மற்றும் தகவல்களை மீட்டெடுக்கிறது மற்றும் செவ்வாய் லேண்டரில் டெபாசிட் செய்யும்.
மணல் புயலால் மாதிரிகள் புதைந்து போகாதா?
முன்னதாக நாசாவின் இன்சைட் மார்ஸ் லேண்டர் தூசி, மணல் புயலில் சிக்கி, சோலார் பேனல்கள் தூசியால் மூடப்பட்டு பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றது. பின் அது செயலலிழந்து. அந்தவகையில் தற்போது மார்டியன் பகுதியில் தரையிறக்கப்பட்ட மாதிரிகளுக்கும் சேதம் ஏற்படாதா எனக் கேள்வி எழுந்ததுள்ளது. உண்மையில் இல்லை. பாதிப்புகள் ஏற்படாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மார்டியன் பகுதியில் காற்று நுண்ணிய துகள்களை மட்டுமே கொண்டுவருகிறது. அது மாதிரி குழாய்களில் மெல்லிய தூசியாக மட்டுமே இருக்கும். இன்சைட் லேண்டர் போல் பாதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/