நாசாவின் இ.ஆர்.பி.எஸ் செயற்கைகோள் 38 ஆண்டுகள் பயணத்தை முடித்து தற்போது செயலிழந்துள்ளது. அமெரிக்காவின் நாசா குழுவினரால் இ.ஆர்.பி.எஸ் எனப்படும் Earth Radiation Budget Satellite (ERBS) செயற்கைகோள் விண்வெளிக்கு அனுப்பட்டது. 1984-ம் ஆண்டு சேலஞ்சர் விண்கலம் மூலம் இ.ஆர்.பி.எஸ் செயற்கைகோள் ஏவப்பட்டது. பின்னர் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. பூமி சூரியனிலிருந்து ஆற்றலை உறிஞ்சி கதிர்வீச்சு செய்தது.
இ.ஆர்.பி.எஸ் செயற்கைகோள் தனது பயண நாட்களில் ஸ்ட்ராடோஸ்பெரிக் ஓசோன், நீராவி, நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் ஏரோசோல்களை ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்தது. இந்நிலையில் 2,450 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் தனது பணியை முடித்து மீண்டும் பூமிக்கு திரும்புகிறது. இதன் பெரும்பாலான உதிரிபாகங்கள் பூமிக்கு நுழைந்தவுடன் எரிந்துவிடும் என்று நாசா தெரிவித்துள்ளது. இருப்பினும் சில துண்டுகள் எரியாமல் பூமியில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதுவும் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதபடி தரையிறங்கும் வகையில் செயல்படுத்தப்படும் என நாசா கூறியுள்ளது.
நாசாவின் இ.ஆர்.பி.எஸ் செயற்கைகோள் ஞாயிற்றுக்கிழமை (நாளை) இரவு தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கட்கிழமை பூமியில் விழுகும் என கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் கணித்துள்ளது. அமெரிக்காவின் கடல் பகுதியில் விழுகும் படி செயல்படுத்தப்பட உள்ளது. செயற்கைகோள் விழுந்தாலும், அதன் உதிரிபாகங்களால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படாதபடி செயல்படுத்தப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/