/tamil-ie/media/media_files/uploads/2022/02/ch260736-1.jpg)
National Science Day 2022: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 28ம் தேதி அன்று தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடி வருகின்றோம். ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் வழியே ஒளி பயணிக்கும் போது அது சிதறடிக்கப்பட்டு அதன் அலை நீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இந்த கண்டுபிடிப்பை ராமன் சிதறல் அல்லது ராமன் விளைவு என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.1930ம் ஆண்டு இந்திய ஆராய்ச்சியாளர் சி.வி.ராமனுக்கு நோபல் பரிசு பெற்றுத் தந்த "ராமன் விளைவை” பிப்ரவரி 28ம் தேதி கண்டுபிடித்தார்.
நீர்நிலைகளை அச்சுறுத்தும் விஷப்பாசிகள்… ஆரம்பத்திலேயே வளர்ச்சியை தடுக்க புது முயற்சி
அறிவியலில் அவரின் பங்கீட்டை உலகறியச் செய்யவும், மாணவர்கள் முதல் அனைவரும் கற்றுத் தெரிந்து கொள்ளவும் இந்த நாளை தேசிய அறிவியல் நாளாக கொண்டாட வேண்டும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்பு குழு 1986ம் ஆண்டு இந்திய அரசைக் கேட்டுக் கொண்டது. அதன் விளைவாக நாம் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை அறிவியல் தினமாக கொண்டாடி வருகிறோம்.
நீர்நிலைகளை அச்சுறுத்தும் விஷப்பாசிகள்… ஆரம்பத்திலேயே வளர்ச்சியை தடுக்க புது முயற்சி
இந்த நாளில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் நடைபெறும் போட்டிகளில் மாணவர்களின் தங்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை சமர்பிப்பதும் உண்டு. அறிவியல் துறையில் ஆர்வத்தை வளர்க்கும் பொருட்டு மாணவர்களுக்கு தொடர்ந்து உற்சாகம் அளிக்கவும், இன்றைய காலகட்டத்தில் அறிவியலில் பங்கு ஏன் இவ்வளவு சிறப்பு மிக்கதாக இருக்கிறது என்பதை உணரவும் அறிவியல் தினம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ‘Integrated Approach in Science and Technology for Sustainable Future’ என்ற தீமில் இந்த ஆண்டுக்கான அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.