உலக நாடுகள் விண்வெளி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. புது புது வளர்ச்சிகளை கண்டு வருகிறது. ராக்கெட், செயற்கைகோள்ளை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் பெர்செவரன்ஸ் ரோவர் (Perseverance rover) செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட ஒரு தனித்துவமான நிகழ்வை கண்டுள்ளது. உருவத்தில் பெரிதாக உள்ள இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில்
ஒளிவட்டத்தைக் கண்டுள்ளது. பூமியில் இது தோன்றினாலும், செவ்வாய் கிரகத்தில் தோன்றியதை ரோவர் கண்டுள்ளது. சூரிய ஒளிவட்டம் பல வண்ண நிறங்களில் இருக்கும்.
பூமியில் காணப்படும் சூரிய ஒளிவட்டம் என்பது 22 டிகிரி வளையமாகும். வெள்ளை ஒளி மேகங்களில் மேல் காணப்படும் பனி படிகங்கள் வழியாக செல்லும் போது ஒளி பரவல் ஏற்பட்டு சூரிய ஒளிவட்டம் தோன்றுகிறது. ஒளி பரவல் ஏற்படுவதால் பல வண்ண நிறங்களில் தோன்றுகிறது. அந்தவகையில்
செவ்வாய் கிரகத்தின் வானத்தில் இது நிகழ்ந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் இதுவரை இந்த நிகழ்வை கண்டதில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பெர்செவரன்ஸ் ரோவர் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி இந்த அரிய நிகழ்வை படமெடுத்துள்ளது.
சூரிய ஒளிவட்டம் என்றால் என்ன?
சூரிய ஒளிவட்டம் Sun Halo என்றழைக்கப்படுகிறது. பூமியின் மேகங்களில் மில்லியன் கணக்கான சிறிய பனி படிகங்கள் உள்ளன. அவை, ஒளிவிலகல், பிளவு ஆகியவற்றால் ஒளியைப் பிரதிபலிக்கின்றன. ஒளியானது பனி படிகங்கள் வழியாக செல்லும் போது இரண்டு ஒளிவிலகல்களுக்கு உட்படுகிறது மற்றும் வளைவு பனி படிகத்தின் விட்டத்தைப் பொறுத்தது.
இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, "ஒளிவட்டம் என்பது சூரியன் அல்லது சந்திரனில் இருந்து 22 டிகிரி ஒளியின் வளையமாகும். மேலும் இது பொதுவாக அறுகோண பனி படிகங்களால் கவனிக்கப்பட்டு
உருவாகின்றன.
செவ்வாய் கிரகத்தில் சூரிய ஒளிவட்டம்
பூமியைப் போலல்லாமல், செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிக அளவு உள்ளது. தண்ணீரை விட கார்பன் டை ஆக்சைடு அதிக அளவு உள்ளது. இந்த படம் கிடைக்கப்பெற்ற போது,உண்மையில் சூரிய ஒளிவட்டமா அல்லது பிரகாசமான வளையமா? என விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
ரோவர் கேமரா வளையத்தை உருவாக்கியதா என்ற கோணத்தில் ஆய்வு செய்தனர். பின்னர், சூரிய ஒளிவட்டம் என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“