இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்ட புதிய வீடியோவில், சந்திரயான்-3 பிரக்யான் ரோவர், சந்திரனின் தென் துருவத்தில் இறங்கும் இடமான சிவசக்தி முனையில், சந்திர ரகசியங்களைத் தேடி சுற்றித் திரிவதைக் காட்டுகிறது.
Advertisment
40 வினாடிகள் கொண்ட வீடியோவில், ரோவர் பள்ளம் நிறைந்த சந்திர மேற்பரப்பில் நகர்வதைக் காணலாம், அதன் பின்னால் லேண்டருடன் சக்கர தடங்களை விட்டுச் செல்கிறது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், ரோவர் லேண்டரில் இருந்து நிலவின் மேற்பரப்புக்கு கீழே இறங்குவதைக் காண முடிந்தது. ரோவர் சந்திர மேற்பரப்பில் 8 மீட்டர் தூரம் சென்றதையும், அது சுமந்து வந்த இரண்டு அறிவியல் சோதனைகளும் இயக்கப்பட்டதையும் விண்வெளி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
"பிரக்யான் ரோவர் தென் துருவத்தில் சந்திர ரகசியங்களைப் பின்தொடர்வதற்காக சிவசக்தி முனையில் சுற்றித் திரிகிறது!" என X தளத்தில் இஸ்ரோ ட்வீட் செய்துள்ளது.
முன்னதாக சனிக்கிழமையன்று, பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் இருந்து சந்திர மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் தொட்ட இடத்திற்கு "சிவசக்தி" என்று பெயரிடப்படும் என்று அறிவித்தார்.
ரோவர் மொத்தம் 500 மீட்டர் தூரம் பயணிக்கும் திறன் கொண்டது.
சந்திரயான்-3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மெதுவாக தரையிறங்கியது என இஸ்ரோ புதன்கிழமை வரலாற்றை பதிவு செய்தது. இதன் மூலம், சந்திரனின் அறியப்படாத தென் துருவப் பகுதியை அடைந்த முதல் தேசமாகவும், சந்திரனில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய நான்காவது நாடாகவும் இந்தியா ஆனது. இதற்கு முன்னர், சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil