பூமி உள்பட அனைத்துக் கோள்களுக்கும் ஒளி கொடுக்கும் உலக வாழ்க்கைக்கு ஆதாரமான சூரியனில் இருந்து அதிவேகமாக சுழல் அலைகள் உண்டாகியிருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த சுழல் அலை ஏற்கனவே உள்ள கோட்பாடுகளில் இருந்து கணிக்கப்படுவதை காட்டிலும் அதிவேகமாக சுழல்வது கண்டறியப்பட்டுள்ளது.
இதனை நியூயார்க் பல்கலைக்கழகம், அபு தாபி மற்றும் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்ட உயர் அதிர்வெண் அலைகள் (HFR) 25 வருட விண்வெளி மற்றும் தரை அடிப்படையிலான தரவு சூரியனின் சுழற்சிக்கு எதிர் திசையில் நகர்கிறது.
சூரியனின் மேற்பரப்பில் சுழல்களின் வடிவமாக (திரவம் போன்ற சுழலும் இயக்கங்கள்) தோன்றுகிறது.
தற்போதைய கோட்பாட்டின் மூலம் கணிக்கப்பட்ட மூன்று மடங்கு வேகத்தில் சூரியனும் நகரும்.
ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தவை குறித்து நேச்சர் அஸ்ட்ரோனாமி இதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த HFR அலைகளின் அறியப்படாத தன்மை, சூரிய இயக்கவியலின் தற்போதைய சூழலை கணிப்பதை கடினமாக்குகிறது.
ஆராய்ச்சியாளர்கள் இந்த அலைகள் குறித்து விளக்குவதற்காக மூன்று வகை சோதனைகளில் ஈடுபட்டனர்.
சூரியனுக்குள் இருக்கும் காந்தப்புலங்களால் இவை ஏற்படுகின்றன; சூரியனில் உள்ள ஈர்ப்பு அலைகளிலிருந்து வருகின்றன; மேலும் அவை பிளாஸ்மாவின் சுருக்கத்தால் ஏற்படுகின்றன.
ஆனால் மூன்று கருதுகோள்களில் எதுவுமே HFR அலைகள் பற்றிய தரவுகளுக்கு எதிராக நன்றாகப் பொருந்தவில்லை.
போலி மெயில்களை கண்டறிவது எப்படி? சில டிப்ஸ் இதோ
ஆனால், இந்த அலைகளின் தன்மை பெருங்கடல்களில் காணப்படும் ராஸ்பி அலைகள் எனப்படும் ஒரு வகை அலைக்கு மிகவும் ஒத்திருக்கிறது.
இந்த அலைகளைக் கூட ஆராய்ச்சியாளர்களால் விளக்க முடியவில்லை. இதுவொரு கண்டறிய முடியாத மர்மமாக இருக்கிறது என்று கட்டுரையின் இணை ஆசிரியரான ஷ்ரவன் ஹனசோஜ் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “