New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/ch123.jpg)
ஜப்பான் உடன் கைகோர்க்கும் இஸ்ரோ
சந்திரயான் 3 மிஷனில் விக்ரம் லேண்டருடன் இணைக்கப்படிருந்த பிரக்யான் ரோவர், அதிலிருந்து வெற்றிகரமாக தனியே பிரிந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரோவின் அடுத்த முயற்சியாக ஜப்பானுடன் சேர்ந்து லூபெக்ஸ் ( LUPEX) என்ற புதிய மிஷனில் ஈடுபட உள்ளது.
ஜப்பான் உடன் கைகோர்க்கும் இஸ்ரோ
சந்திரயான் 3 மிஷனில் விக்ரம் லேண்டருடன் இணைக்கப்படிருந்த பிரக்யான் ரோவர், அதிலிருந்து வெற்றிகரமாக தனியே பிரிந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரோவின் அடுத்த முயற்சியாக ஜப்பானுடன் சேர்ந்து லூபெக்ஸ் ( LUPEX) என்ற புதிய மிஷனில் ஈடுபட உள்ளது.
நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இஸ்ரோ அடுத்த முயற்சியாக ஜப்பான் நாட்டின் விண்வெளி ஆய்வு நிறுவனமான JAXA-வுடன் இணைந்து பணியாற்ற உள்ளது. இந்த மிஷன் லூபெக்ஸ் ( LUPEX) என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இது 2024-2025 வரை உள்ள காலகட்டத்தில் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக 2008ம் ஆண்டு விண்ணில் அனுப்பப்பட்ட சந்திரயான் -1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில் “ சந்திரயான் செயல்திட்டம் சந்திரயான் 3 வெற்றியுடன் நின்றுவிடாது. தொடர்ந்து சந்திரயான் 5, சந்திரயான் 6 மிஷன்களை எதிர்பார்க்கலாம். இது தொடர்பாக விரைவில் அறிவுப்பு வெளியாகும்” என்று அவர் கூறினார்.
” சந்திரயான் -2 திட்டம் வெற்றியடைந்திருந்தால், சந்திரயான் -3 என்பது சாம்பிள் ரிடர்ன் மிஷனாக இருந்திருக்கும் ( sample return mission). இந்நிலையில் தற்போது சந்திரயான் 4 என்பது சாம்பிள் ரிடர்ன் மிஷனாக அமையலாம்” என்றும் அவர் கூறினார்.
’சாம்பிள் ரிடர்ன் மிஷன்’ என்றால் விண்ணில் அனுப்பப்படும் விண்கலம், நிலவின் மேல் பரப்பில் உள்ள மாதிரிகளை ஆய்வுக்காக பூமிக்கு எடுத்து வரும். இந்நிலையில் நிலவிலிருந்து பூமிக்கு இப்படி ஆய்வுக்கான மாதிரிகளை எடுத்து வரும்போது, நாம் பயன்படுத்தும் லேண்டர் மற்றும் ரோவர் இன்னும் ஆழமாக வடிவமைக்க வேண்டும். இந்நிலையில் 2020-ல் சீனா Chang’e-5 மூலம் இதுபோன்ற ஒரு மிஷனை செய்தது.
LUPEX மிஷன், நிலவின் மேல்பரப்பை கூடுதலாக ஆய்வு செய்வதற்கான சாத்தியங்களை இஸ்ரோவிற்கு ஏற்படுத்தும். மேலும் இந்த மிஷனில் எப்போதும் நிழலாக இருக்கும் நிலவின் பகுதியை ஆய்வு செய்ய உள்ளனர்.
சூரியனை சந்திக்காத நிலவின் ஒரு பகுதி நிரந்தரமாக இருட்டாக இருக்கும். இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள இடங்களில், விண்கலம் மற்றும் அதன் மற்ற கருவிகள் சார்ஜ் செய்வதற்கு மாற்று பேட்டரி ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
LUPEX மிஷனில், நிலவின் போலார் இடங்களில் இருக்கும் அதிகபடியான தண்ணீரை ஆராய்ந்து, நிரந்தரமாக அங்கு விண்வெளி நிலையத்தை அமைக்கும் சாத்தியங்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய உள்ளது.
இந்நிலையில் LUPEX மிஷனில், விண்கலம் மற்றும் ரோவரை ஜப்பான் தயாரிக்கிறது. லேண்டர் இஸ்ரோவின் தயாரிப்பாக இருக்கும். இந்நிலையில் ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான JAXA இந்த வாரத்தின் கடைசியில் நிலவுக்கு விண்கலைத்தை அனுப்ப இருக்கிறது .
இந்நிலையில் தற்போது இஸ்ரோ, ஆதித்யா- எல் 1 (Aditya-L1) மிஷனுக்குதான் முன்னுரிமை வழங்க உள்ளது. சூரியனை ஆய்வு செய்யும் முதல் மிஷன் இதுவாக இருக்கும். 90 கி.மீ தொலைவில் இருந்து சூரியனை ஆய்வு செய்ய உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.